அடேங்கப்பா! இது லிஸ்ட்லயே இல்லையே.. உதயமான 'உதயா நகர்'- குழந்தைக்கு பெயர் இன்பநிதி.. எங்கு தெரியுமா
கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இங்கு நிர்வாகிகள் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டனர்.
Recommended Video
திமுக இளைஞரணி செயலாளராக தற்போது உதயநிதி ஸ்டாலின் உள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தல் முதலே கட்சி பணிகளை இவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் உதயநிதிக்கு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி மாபெரும் வெற்றி பெற்றார்.

உதயநிதி
அப்போதே உதயநிதி அமைச்சரவையில் இருப்பார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவரது நெருங்கிய நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த கோரிக்கையை முன்மொழிய அமைச்சர்கள் மூர்த்தி, செஞ்சி மஸ்தான், எஸ்எஸ் சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வழிமொழிந்துள்ளனர்.

கோவை
இதற்கிடையே கோவை மாவட்டத்தில் ஒரு பகுதிக்கே உதயா நகர் எனப் பெயர் வைத்துக் கலக்கியுள்ளனர் அப்பகுதி திமுக நிர்வாகிகள் கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதி சீங்குழி. இப்பகுதியில் மலைவாழ் மக்களான இருளர்கள் மற்றும் அருந்ததிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி
இந்த நிலையில் 1996ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இப்பகுதியில் வசிக்கும் அருந்ததிய மக்களுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி எம்எல்ஏ-வும்,திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உதயமான உதயா நகர்
அப்போத காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடுக்கப்பட்ட இந்த இடத்திற்கு "உதயா நகர்" எனப் பெயரிட்டனர். அப்பகுதியில் உதயா நகர் எனப் பெயர்ப் பலகையும் திறக்கப்பட்டு இனிப்புகளை வழங்கி திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைக்குப் பெயர் இன்பநிதி
அப்போது அப்பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றுக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அந்த குழந்தைக்கு இன்பநிதி என்று பேயர் சூட்டப்பட்டது. அப்போது,அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் குழந்தைக்கும் "இன்பநிதி" எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசித்து வரும் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications