Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் பரிசு 1000 ரூபாய்.. கோவை ரேஷன் கடையில் நடந்த கூத்தை பாருங்க.. உள்ளே வந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சாய்பாபா காலனி பகுதியில் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1¼ லட்சத்தை அபேஸ் செய்த ரேஷன் கடை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. முன்னதாக முன்னதாக, பொங்கல் பரிசு தொகுப்புக்கான ரொக்க தொகையை பெறுவதில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. இதன்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், வருமான வரி செலுத்துவோர் போன்ற பிரிவினரைத் தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1000 பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

A ration shop employee who stole Rs 1¼ lakh Pongal price money in Coimbatore


இதையடுத்து, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குமே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, எல்லா அரிசி அட்டைதாரர்களுக்குமே ரூ.1000, அரிசி, சர்க்கரை, முழுக்கரும்பும் பொங்கல் தொகுப்பாக வழங்குவதாக அறிவித்தது. இதனிடையே ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.. இதில் வெளியூரில் வேலை செய்யும் பலர் பொங்கல் அன்று தான் வந்த காரணத்தால், பொங்கல் பரிசை வாங்க முடியவில்லை.. அப்படி வாங்க முடியாத பலருக்கு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை..

இந்த சூழலில் கோவை சாய்பாபா காலனி பகுதியில், வாங்காதவர்களின் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1¼ லட்சத்தை சுருட்டிய ரேஷன் கடை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். கோவை சாய்பாபா காலனி பகுதி ரேஷன் கடைகளின் மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் சுரேஷ் குமார்(வயது 54). இவர் சாய்பாபா காலனி போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளாவது:

சாய்பாபா காலனி ரேஷன் கடையில் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 35 வயதாகும் மதியரசு என்பவர் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவரிடம், பொங்கல் பரிசுத்தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1,000 வழங்க ரூ.8 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கமாக கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து விட்டார். மீதமுள்ள 120 பேருக்கு பணம் வழங்கவில்லை. அந்த பணத்தை திரும்பஅரசிடம் ஒப்படைக்குமாறு கடந்த 17-ந் தேதி அவருக்கு அறிவுறுத்தினோம்.

கண்ணீர் மல்க வேலை தேடி சென்னை,கோவை,பெங்களூர் செல்லும் எம் மதுரை மக்கள்.. நெட்டிசன் பதிவு


ஆனால் அவர் காலதாமதம் செய்து வந்தார். அவரை பிடித்து பணத்தை பெற முயற்சி செய்தபோது தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது. அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் வழக்குப்பதிவு விசாரித்தார். விசாரணையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்காமல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மோசடி செய்த மதியரசு மீதான புகாருக்கு முகாந்திரம் இருந்தது. இதையடுத்து மதியரசு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+