கோவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட.. பெண் காவலர் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!
கோவை: கோவையில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலர் ஆய்வாளர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கலையரசி, இவர், மாவட்ட குற்றப்பிரிவு பொருளாதார பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தார். பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளார்..
இவர் நிதி நிறுவன மோசடி வழக்கில், அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம்
இதனை தொடர்ந்து கோவை சரக டிஐஜி முத்துசாமி, கலையரசியை பணியிடை நீக்கம் செய்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பெண் போலீஸ் கலையரசி மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சக போலீஸ்காரர்களிடமும் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன விரக்தியில் இருந்த பெண் போலீஸ் கலையரசி மண்ணெண்ணய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

தற்கொலை முயற்சி
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பெண் போலீஸ் கலையரசியை உடனடியாக காப்பாற்றினார்கள். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக, ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் கலையரசி திடீரென ஏன் தற்கொலைக்கு முயன்றார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் நிதி நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்கொலை முயற்சி
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பெண் போலீஸ் கலையரசியை உடனடியாக காப்பாற்றினார்கள். இதனால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக, ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் கலையரசி திடீரென ஏன் தற்கொலைக்கு முயன்றார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதால் நிதி நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோவையில் கடந்த சில நாட்களாகவே அடிதடி, தகராறு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குற்றங்கள் தொடர்பாக, ஏராளமான மக்கள் கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தது வருகின்றனர். ஆனால் பெண் போலீஸ் கலையரசி போல் இருக்கும் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications