விடிய விடிய AC ஓடுது போல.. கோவையை தவிக்கவிடும் கோடை.. கோயம்புத்தூரில் பொறி பறக்கும் ஏசி விற்பனை
கோவை: வெயில் கொளுத்தி வரும்நிலையில், சென்னையை போலவே, கோவையிலும், ஏசி விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளதாம்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்தே, வெயிலின் தாக்கம் தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.. தற்போதுதான் அக்னி நட்சத்திரம் துவங்கியிருப்பதால், இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் அலர்ட் செய்து வருகிறது..

சுகாதார துறை: நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வெயிலில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் வானிலை மையமும், சுகாதாரத்துறையும் மக்களை கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.. ஆனாலும் வெயில் சமாளிக்க முடியவில்லை..
இந்த வெப்பத்தை சமாளிக்கவும் முடியாமல், கடும் வெப்பமும், புழுக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல், வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது... அதுவும், இரவு, பகல் என எந்நேரமும் ஓடவேண்டிய நிலைமை உள்ளது..
சென்னை புறநகர்: அந்தவகையில், சென்னையின் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏசி வாங்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. அனைத்து ஏசி கம்பெனிகளுக்குமே கடன் வசதி இருப்பதால், முன் தொகையை கட்டிவிட்டு, ஏசி வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஏனென்றால், புழுக்கம் தாங்காமல் இரவெல்லாம் கைக்குழந்தைகள் தூங்குவது கிடையாதாம்.. சில வீடுகளில் பிள்ளைகளின் தொந்தரவு தாங்காமலும் ஏசி வாங்க முயன்றுள்ளார்களாம்..
கோவை கிளைமேட்: அந்தவகையில், சென்னையை போலவே கோவையிலும் ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.. கோவையை பொறுத்தவரை, எப்போதுமே மிதமான தட்பவெப்பநிலையே நிலவும்.. அதிக குளிரும் இல்லாமல், அதிக வெயிலும் இல்லாமல் உள்ளதால்தான், பலருக்கும் கோவையின் கிளைமேட் என்றால் அலாதி பிரியம்.
ஆனால், இப்போது சென்னைக்கு நிகராக கோவையிலும் கொளுத்துகிறது வெயில்.. இதனால், பண்டிகை காலம் போலவே, ஏசி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்.. பகல் நேரங்களிலும் வெப்ப அலை வீசுவதால், கோவை சாலைகளில் பைக்கில் செல்லவே முடியவில்லை.. இரவு நேரங்களிலும், தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.. அதனால்தான், ஏசி வாங்க முயன்றுள்ளனராம்.. ஏசியை போலவே, ஏர் கூலர்கள் டவர் ஃபேன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள்..
விற்பனை: அந்தவகையில், குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழலை இந்த அக்ன நட்சத்திரம் ஏற்படுத்தியிருக்கிறதாம்.. 1 டன் ஏசி ரூ.30 ஆயிரம் முதல் கிடைப்பதாலும், இது தவணை முறையிலும் கிடைப்பதாலும், ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதாவது, கடந்த வருடம், மாதம் 800 முதல் 1300 ஏசி மட்டுமே விற்பனையான நிலையில், இப்போது, 1500 முதல் 2000 வரை ஏசி மிஷின் விற்பனையாகிறதாம்.. அப்படி பார்த்தால், கடந்த பிப்ரவரி முதல் ஏசி விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள்.. இதனால் ஏசி எந்திரங்களின் இருப்பு குறைந்து விற்பனையும் பாதித்துள்ளதை , விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. எப்படியும் வருகிற ஜூன் மாதம் வரை கடும் வெயில் இருக்கும் என்பதால், ஏ.சி. விற்பனை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தாமதம்: புழுக்கம் தாங்காமல் ஏசி மிஷினை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டாலும்கூட, அதனை பொருத்துவதற்குதான் ஊழியர்கள் இல்லாமல் படாதபாடு படவேண்டியிருக்கிறதாம்...!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications