கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திரா இளைஞர் தற்கொலை..மன அழுத்தம் என கடிதம்..போலீஸ் விசாரணை
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: ஈஷா யோகா மையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடலைக் கைப்பற்றி ஆலாந்துறை காவல்நிலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் பற்றி கடந்த பல ஆண்டுகாலமாகவே புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. வெள்ளியங்கிரி பகுதியில் சாடிவயலுக்கும், தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில்தான் ஈஷா மையம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
மன அழுத்தம் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஈஷா யோக மைத்தில் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திரா இளைஞர்
உயிரிழந்த இளைஞரின் பெயர் கொள்ளு ரமணா என்பதாகும். இவர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். 32 வயதான இவர் மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

மன அழுத்தம்
இந்நிலையில் நேற்றிரவு ஈசாவிலுள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்கொலை கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்ததாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரமணாவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனிடையே தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மூளைச்சலவை
ஈஷா யோக மையம் மீது கடந்த பல ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வருகின்றன. யோகா மையத்திற்கு வரும் பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுவதாக அந்த மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தில் குமாரே புகார் கூறியிருந்தார். யோகா மையத்திற்கு வரும் பணக்காரர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக சிலர் பணியாற்றி வருவதாக செந்தில் குமார் மேலும் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்து புகார்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தனது 2 மகள்களை ஜக்கி வாசுதேவ் சன்னியாசியாக்கிவிட்டார் என்று புகார் தெரிவித்தார். அதே ஆண்டில் ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் அரிகரனை மீட்டுக் கொடுக்குமாறு தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மாணவர்களுக்கு சித்ரவதை
ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தோப்புக் கரணம் போடச் செய்வது, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வது, மாட்டுச் சானத்தை அள்ளச் செய்வது, பைத்தியமாக்குவது என கொடுமைப்படுத்துவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகேந்திரன் புகார் கூறினார்.

டிஎஸ்பி விசாரணை
இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஷா யோக மைத்தில் டி.எஸ்.பி திருமால்தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications