‛‛மக்கள் எதையும் மறக்கமாட்டாங்க’’.. மனைவி தீவிர ராம பக்தை எனக்கூறிய ஆ ராசா.. அண்ணாமலை தந்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

கோவை: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராமரை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என திமுக எம்பி ஆ ராசா பேசினார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் எனது மனைவி தீவிர ராம பக்தை எனக்கூறினார். இந்நிலையில் தான் ஆ ராசாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ ராசா மீண்டும் நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். தீவிர கடவுள் மறுப்பாளராக அறியப்படும் ஆ ராசாவின் பேச்சுக்கள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும்.

அந்த வகையில் சமீபத்தில் மேடை ஒன்றில் ஆ ராசா, ‛கடவுள் ராமரை நாங்கள் ஏற்க மாட்டோம்'' எனக்கூறியிருந்தார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டு பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில் ஆ ராசாவின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பியது.

bjp-chief-annamalai-reply-to-a-raja-who-says-his-wife-is-the-god-rama-devotee

இந்நிலையில் தான் ஆ ராசா தான் போட்டியிடும் நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது ‛‛என் மனைவி தீவிர ராம பக்தை. சனிக்கிழமை ராமரை கும்பிட்டு விரதம் இருந்தார். வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காக விரதம் இருந்தார். மொத்தம் வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருந்தார். என் வீட்டில் பூஜை அறை இன்றும் உள்ளது. நான் பூஜை அறைக்கு சென்றது இல்லை. கடவுள் நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடப்பட்டும். எதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என்றார்.

ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நெருங்குவதால் இந்துக்களின் ஓட்டுகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆ ராசா தனது கொள்கையில் இருந்து மாறி பேசி மக்களின் மனதை வெல்ல நினைக்கிறார் என விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்நிலையில் தான் தனது மனைவி ராம பக்தை என திமுக எம்பி ஆ ராசா கூறியிருப்பது பற்றி நேற்று பாஜக மாநில தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அண்ணாமலை கூறியதாவது: ‛‛தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு திமுகவினர் கையில் வேல் எடுத்து சுற்றி வந்தனர். அந்த சமயத்தில் எந்த கடையிலும் வேல் இல்லை. முருகப்பெருமானிடம் மட்டுமே வேல் இருந்தது. ஸ்டாலின், கனிமொழி வேல் தூக்கினார்கள். உதயநிதி ஸ்டாலின் 2 வேல் தூக்கினார்.

வருமானவரி பாக்கி.. திமுக ஆ ராசாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.3.73 கோடி தான்! கடன் எவ்வளவு தெரியுமா
அதேபால் இன்று ஆ ராசா, சனதான தர்மம், மனைவி ராமர் பக்தை, நான் அயோத்தியாவுக்கு போனேன் என்று பேசுகிறார். ஆனால் ஜனநாயகத்தின் பெரிய வியாதி மறதி. ஆனால் இந்த முறை மக்கள் சரியாக நியாபகம் வைத்து கொண்டு யாரெல்லாம் பொய்வேசம் போடுகிறார்களா அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

உண்மையாகவே சனாதன தர்மத்தை எதிர்க்கிறீர்களா? அப்படியென்றால் தினமும் எதிர்ப்பு தெரிவியுங்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு எதிர்ப்பும், தேர்தல் வேளையில் நெற்றியில் பட்டை போடுவதும், தேர்தல் பிறகு மீண்டும் எதிர்ப்பது ஏன்? இதுதான் அவர்களின் போலி சனாதன தர்மம்'' என பதிலடி கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+