கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம்.. விமர்சனம் இல்லாமல் வளர முடியாது... சீமான் பேச்சு

Google Oneindia Tamil News

கோவை: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது செய்வோம், இது செய்வோம் என்பவர்கள், ஏன் ஆட்சியில் இருந்தபோது செய்யவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சூலூர் தொகுதியான செஞ்சேரி மலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் என்பது மிக இழிவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சிகள் நிறுவனமாகிவிட்டன.

வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி முதலீடு செய்கிறார் என்றால், மக்களுக்கு சேவை செய்ய வருகிறாரா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

தோற்பதற்காக அல்ல

தோற்பதற்காக அல்ல

நாங்கள் தோற்பதற்காக தானே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கேட்கிறார்கள். தோற்பதற்காக அல்ல, நல்ல அரசியலை தொடங்குவதற்காக போட்டியிடுகிறோம். வேட்பாளர்களோ, தலைவர்களோ வெற்றியை தீர்மானிப்பது இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றும் கூறினார்.

ரஜினி வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்.. ஐ ஆம் வெயிட்டிங்.. சீமான் அதிரடி ரஜினி வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்.. ஐ ஆம் வெயிட்டிங்.. சீமான் அதிரடி

பாராட்டு தான்

பாராட்டு தான்

மேலும், எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டு தான். நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பது தான். தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை இல்லை. அடுத்த 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் சந்தை.

ஓட்டுக்கு காசு

ஓட்டுக்கு காசு

தமிழகத்தில் உள்ள 24 மாவட்டத்தை வறட்சியாக அறிவித்து உள்ளது. அப்படி என்றால் தண்ணீர் இல்லை என்று அர்த்தம். அ.தி.மு.க.,- தி.மு.க.வை வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள். வெல்ல முடியாத படை உலகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.

இளைஞர்கள் உணர வேண்டும்

இளைஞர்கள் உணர வேண்டும்

தேர்தல் என்றால் என்ன மாறுதல் வருகிறது என்பதை படித்த இளைஞர்கள் உணர வேண்டும். ஊழல் நிறைந்த கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நல்லது செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது செய்வோம், இது செய்வோம் என்பவர்கள், ஏன் ஆட்சியில் இருந்தபோது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

English summary
NTK Co - ordinator Seeman Said that Can not grow without criticism
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X