கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னத்த சொல்ல.. ஒரு ஓட்டு மட்டுமே வாங்கிய பாஜக வேட்பாளர்.. கோவையில் தொண்டர்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

கோவை: கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் போட்டியிட்ட கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். பாஜகவைச் சேர்ந்த இவர் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

Recommended Video

    BJP Candidate D Karthik விளக்கம் | குடும்பத்தில் 5 பேர்.. கிடைத்த வாக்கு 1..? | Oneindia Tamil

    தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது

    சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க! சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!

    இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    5 பதவியிடங்கள்

    5 பதவியிடங்கள்

    இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

    முடிவுகள் அறிவிப்பு

    முடிவுகள் அறிவிப்பு

    மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 978 பதவியிடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    அதிமுக 3 இடங்கள்

    அதிமுக 3 இடங்கள்

    நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் காலை முதல் வெளியாகிவருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 23 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மூன்றை திமுக கைப்பற்றியுள்ளது.

    பாஜக வேட்பாளர்

    பாஜக வேட்பாளர்

    கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார்.

    குருடம்பாளையம் ஊராட்சி

    குருடம்பாளையம் ஊராட்சி

    இதையடுத்து, திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும். பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும் பெற்றுள்ளனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். ஒரே ஒரு வாக்கு வாங்கி பாஜக வேட்பாளர் தோல்வி அடைநத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. வேட்பு மனு தாக்கலுக்கு பரிந்துரை செய்தவர்கள், பிரச்சாரம் செய்தவர்கள் கூட வாக்களிக்கவில்லை என்பது பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    BJP candidate Karthik, who contested the by-election for the 9th ward in Coimbatore's Gurudambalayam panchayat, lost. only he get single vote in election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X