மேட்டுப்பாளையத்தில் அசைவேயில்லை.. 2 நாளாக ஒரே இடத்தில் அதே உருவம்.. கோவையை இப்படி பயமுறுத்திடுச்சே
கோவை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 2 இடத்தில் நடந்த சம்பவத்தினால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பாம்புகளிலேயே அதிக விஷத்தன்மை கொண்டது ஆப்பிரிக்காவில் காணப்படும் கோப்ரா வகை... அதேபோல, அதிக விஷம் கொண்ட பாம்பாக காணப்படுவது ராஜநாகம்.
கொடிய விஷயம்: தமிழகத்தின் ஒருசில பகுதியில் இவை வாழ்ந்து வருகின்றன... இந்த ராஜ நாகங்கள் அதிக விஷத்தை செலுத்தக்கூடியது.. ஒரே நேரத்தில் 11 பேரை கொல்லும் அளவுக்கு விஷம் வைத்திருக்குமாம். இப்படிப்பட்ட ராஜநாகம், நேற்றைய தினம், வெவ்வேறு இடங்களில் பொதுமக்களை பதறவைத்துவிட்டன.

கர்நாடகாவின் அகும்பே பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும்.. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டது. அங்கிருந்த வீட்டை ஒட்டிய புதரில் புகுந்து, மரத்தின் மீது அந்த பாம்பு ஏறிவிட்டது. இதைப்பார்த்ததுமே அங்கிருந்த மக்கள் பதறிப்போய்விட்டார்கள்.. மரத்திலிருந்து எப்போது இறங்கிவிடுமே என்று கலங்கிநின்றனர்.
சீற்றம்: அதற்குள் தகவலறிந்து மழைக்காடு ஆராய்ச்சி நிலைய பாம்பு பிடி வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள்.. மரத்தில் நின்ற பாம்பை உடனடியாக கீழே இறக்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. காரணம், அந்த நீளமாக இருந்திருக்கிறது.. அத்துடன் பயங்கரமாக சீறிக் கொண்டே இருந்திருக்கிறது. எனவே, பாம்பின் வாலை பிடித்து மரத்தில் இருந்து கீழே இறக்கியிருக்கிறார்கள்.
பாம்பு பிடி வீரர்கள், இவர்களுடன் பெண் வன அதிகாரி என அனைவரும் சேர்ந்து, இந்த பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றனர்.. இதற்காக அங்கிருந்த சுவற்றில், பாம்பு பிடிக்கும் பையை வைத்து, அதன் வாய்ப்பகுதியில் ஒரு குழாயை கட்டி, பொந்து போல ஏற்பாடு செய்தார்கள்.. அதற்கு பிறகு, கீழே இறக்கப்பட்ட பாம்பு திடீரென ஓடத்துவங்கும்போது, பாம்பு பிடிக்கும் வீரர் லாலவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட்டார்கள்.. அந்த பாம்பு, பொந்து என நினைத்து பைக்குள் விழுந்துவிட்டது.
பாதுகாப்பு: பின்னர் அதை மூட்டை கட்டிய அதிகாரிகள் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டுசென்றனர்.. இறுதியாக பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர். இதுபற்றிய வீடியோவை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதேபோல, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையிலும் ஒருசம்பவம் நேற்று நடந்துவிட்டது.. வனச்சரக பகுதியை ஒட்டியுள்ளது பாலப்பட்டி என்ற கிராமம்,.

என்ன காரணம்: இந்த கிராமத்துக்குள், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ராஜநாகம் ஒன்று 2 நாட்களுக்கு முன்பு புகுந்துவிட்டது. 2 நாட்களாகவே ஒரே இடத்தில் படுத்து கிடக்கிறதாம்.. எங்கேயுமே நகராமல், அசைவின்றி ஒரே இடத்தில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்துவந்து, புதருக்குள் பதுங்கி இருந்த ராஜநாகத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பாம்பு பிடி வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடித்தான் அந்த ராஜநாகத்தை மீட்டு வெளியே எடுத்து வந்தனர். அந்த ராஜநாகம் சுமார் 12 அடி நீளம் இருந்துள்ளது... அந்த பாம்பின் உடல்நிலை பற்றி வனத்துறையினர் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
சோர்வு: அப்போதுதான், அந்த பாம்புவால் எதுவுமே சாப்பிட முடியாத நிலைமையில் இருந்திருப்பதை கண்டறிந்தனர்.. சோர்வான நிலையிலேயே பாம்பு இருந்திருக்கிறது. அதனால்தான், எங்குமே ஊர்ந்து செல்லமுடியாமல், ஒரே இடத்தில் அசைவின்றி கிடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு பிறகு, மீட்கப்பட்ட ராஜநாகம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டுபோய் விடப்பட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications