டாப் கியருக்கு போகும் கோவை.. சரவணம்பட்டி இனி மொத்தமாக மாற போகுது.. இது நடந்தால் அசுர வளர்ச்சி தான்
கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் எந்தளவுக்குப் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது கோவை மக்கள் அனைவருக்குமே தெரியும். இதற்கிடையே சரவணம்பட்டி பகுதியில் டிராபிக்கை குறைக்கத் தமிழக அரசு எடுக்கும் முக்கிய நடவடிக்கை குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னைக்குப் பிறகு முக்கியமான நகரம் என்றால் அது கோவை தான். இதன் காரணமாகவே வந்தே பாரத் தொடங்கிப் பல முக்கிய திட்டங்கள் முதலில் கோவைக்கு வருகிறது.

அதேநேரம் சென்னைக்கு இணையாகக் கோவையில் பொது போக்குவரத்து எதுவும் இல்லை. தற்போது வரை கோவையில் பேருந்துகள் மட்டுமே பொது போக்குவரத்தாக இருந்து வருகிறது..
கோவை டிராபிக்
குறிப்பாக சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டிராபிக் உச்சத்தில் இருக்கும். மாலை நேரங்களில் ஆபீஸ் சென்று திரும்புவோர் டிராபிக்கில் சிக்கிச் சிதறிவிடுவார்கள். ஒட்டுமொத்த கோவை மக்களுக்கும் டிராபிக் என்பது எவ்வளவு மோசமான சிக்கலாக இருக்கிறது என்பது தெரியும். நீங்கள் மாலை நேரங்களில் சும்மா மேப்பை ஓபன் செய்து பார்த்தாலே அது பெரும்பாலும் சிவப்பு கலரில் தான் இருக்கும். அந்தளவுக்குக் கோவையில் டிராபிக் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
சரவணம்பட்டி டிராபிக்
இதையடுத்து கோவை சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கு மேம்பாலத்தைக் கட்ட கடந்த 2023ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு இந்த மேம்பாலத்தைக் கட்ட திட்டமிட்டது.. அதேநேரம் தற்போது முன்மொழியப்பட்டுள்ள கோவை மெட்ரோ ரயில் பாதை இந்த சரவணம்பட்டி வழியாகவே செல்லும் வகையில் உள்ளது.
இதனால் மெட்ரோ திட்டம் இறுதியாவதற்கு முன்பு மேம்பாலத்தைக் கட்டினால் மீண்டும் மெட்ரோ பணிகளுக்கு அதை இடிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மேம்பாலப் பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சரவணம்பட்டியில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்க சிஎம்ஆர்எல் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை அடுக்கு மேம்பாலம்
இதுபோல ஒரே நேரத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்டுவது என்பது பல வகைகளில் உதவியாகவே இருக்கும். இது இரண்டு உள்கட்டமைப்பு திட்டங்களையும் தடையின்றி ஒருங்கிணைக்க அனுமதிக்கும். மேலும், நிலம் கையகப்படுத்துதல் தொடங்கி செலவுகளையும் கூட கணிசமாகக் குறைக்கும்.
திட்டம் என்ன
தற்போது போடப்பட்டுள்ள திட்டத்தின்படி சரவணம்பட்டியில் டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்படும். அதில் மேல் மட்டத்தில் மெட்ரோ ரயில் செல்லும். கீழ் மட்டத்தில் வாகனங்கள் செல்லும். இந்த திட்டத்தை சிஎம்ஆர்எல் அமைப்பு தான் மேற்கொள்ளும். இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்திற்கான தூண்களை முதலில் சிஎம்ஆர்எல் நிறுவும். பிறகு சாலை அமைக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை மேற்பார்வையிடும். அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு மெட்ரோ ரயில் நிர்வாகம் வழக்கம் போல மேலே மெட்ரோ பணிகளை மேற்கொள்ளும்.
இந்த திட்டத்திற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முழுமையாக முடிந்தால் அது சரவணம்பட்டியில் நிலவும் டிராபிக்கை வெகுவாக குறைக்கும் என்றே வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அத்துடன் மெட்ரோவும் செயல்பாட்டிற்கு வரும் போது டிராபிக் பிரச்சினை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications