அதிகாலை கோவையை அதிர வைத்த கார் வெடிப்பு.. இறந்தவர் அடையாளம் தெரிந்தது! 3 ஆண்டு முன் விற்கப்பட்ட கார்
கோவை: காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் முபின் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி கார் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலிண்டர் வெடிப்பு
விபத்துக்குள்ளான கார், வேகத் தடையில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. கார் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதியின் 4 திசைகளிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் பாதுகாப்பையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

டிஜிபி ஆய்வு
கார் வெடித்து விபத்துக்குள்ளான இடத்துக்கு சென்ற தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "கார் வெடித்தது குறித்து அனைத்து வகைகளிலும் விசாரணை நடத்தி வருகிறோம். காரில் இருந்த இரண்டு சிலிண்டர்களில், ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

தீவிர விசாரணை
காரில் இருந்த சிலிண்டர் எங்கிருந்து வாங்கப்பட்டது? இறந்த நபர் யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இதுபற்றி விசாரிக்க 6 குழுக்கள் அமைத்து தடயங்களை சேகரித்து வருகிறோம். என்ஐஏவுக்கு தகவல் தெரிவிப்பது குறித்து புலன் விசாரணைக்குப் பின் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

யார் அவர்?
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரை விற்பனை செய்து 3 ஆண்டுகள் ஆனதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் முபின் என்பதும் இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு NIA விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications