மக்களே பயப்படாதீங்க.. திமுக இருக்கும்வரை தமிழகத்திற்கு ஆபத்து வராது.. திருச்சி சிவா அதிரடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தை யார் தாக்க வந்தாலும் கவசமாக நின்று பாதுகாப்பது திமுக மட்டுமே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் பொறுப்புடன் இருக்கும் கட்சி திமுக ஒன்றுதான் என்றும் அவர் கூறினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி சிவா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

75 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறின

75 சதவீத வாக்குறுதிகள் நிறைவேறின

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடின. ஆட்சிக்கு வருவதற்காக திமுக இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுக்கிறது.. ஆனால் இவற்றை நிறைவேற்ற முடியாது என அவை பிரச்சாரம் செய்தன. ஆனால் இன்றோ எதிர்க்கட்சிகள் வாயடைத்து போய் நிற்கின்றன. ஏனெனில் கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை ஒன்றரை ஆண்டுகளிலேயே திமுக நிறைவேற்றிவிட்டது.

மக்களுக்கான கட்சி திமுக

மக்களுக்கான கட்சி திமுக

கொரோனா காலத்தில் இரக்கமற்ற வகையில் அதிமுக அரசு நடந்து கொண்டது மருத்துவமனைகளில் போதிய இடமில்லாமல் கொரோனா நோயாளிகள் அவதிப்பட்டனர். ஆனால், ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுக சார்பில் செல்போன் எண்களை அறிவித்து கொரோனா கால அவசர சேவைகளை மக்களுக்கு திமுக செய்து கொடுத்தது. ஆட்சியில் இருக்கிறோமா இல்லையா என்பதை பற்றி கவலைப்படும் கட்சி திமுக கிடையாது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் திமுக.

இந்தி மொழி எங்களுக்கு எதற்கு?

இந்தி மொழி எங்களுக்கு எதற்கு?

இன்றைக்கு மத்தியில் இருக்கும் பாஜக அரசு, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதற்கும், சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கும் கடுமையான சட்டங்களை கொண்டு வருகிறது. பாஜக ஆட்சியில் அடித்தட்டு மக்கள் படும் அவஸ்தைகளை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளை பின்னுக்கு தள்ளி இந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. எங்கள் தாய்மொழி தமிழ் இருக்கும் போது வேற்று மொழியான இந்தியை நாங்கள் ஏன் கற்க வேண்டும்?

காக்கும் கவசம் திமுக

காக்கும் கவசம் திமுக

தமிழகத்தை பொறுத்தவரை, நமது கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றை அழிக்க அந்நிய சக்திகள் பெரும் சதி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தை எந்த சக்தி தாக்க வந்தாலும் பாதுகாப்பு கவசமாக நின்று திமுக காக்கும் என்பதை இங்கு அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். திமுக இருக்கும் வரை தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் வராது. இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+