கோவையில் ஆப் மூலம் பழகி 'தனிமையில்' இருக்க ஆசைப்பட்ட இளைஞர்... ஆயுசுக்கும் மறக்க முடியாத சம்பவம்
கோவை துடியலூர் கவுண்டர் மில்ஸ் சேரன் நகரில் ஆப் மூலம் பழகி தனிமையில் சந்திக்க ஆசைப்பட்ட இளைஞருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு சிறுவன் ஒருவர் நோகடித்துள்ளார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு என்று ஆப்கள் செயல்படுகின்றன. அந்த ஆப்களில் சபலத்தில் போகும் ஆண்கள் கடைசியில் சங்கடப்படும் அளவிற்கு சம்பவங்கள் நடக்கின்றன. ஓரினச்சேர்க்கைக்கு தனிமையில் சந்திக்க ஆசைப்படும் இளைஞர்களை குறி வைத்து பணம் பறித்து மோசடிகள் அரங்கேறுகின்றன.

அப்படித்தான் கோவை துடியலூர் கவுண்டர் மில்ஸ் சேரன் நகரில் ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி இளைஞரை தனிமையில் சந்திக்கப்பட்ட இளைஞரிடம் சிறுவன் ஒருவர் பீர் பாட்டிலை வைத்து பணம், செல்போன், பைக் என அனைத்தையும் பறித்துவிட்டு அனுப்பி உள்ளார். ஆசையோடு போன இளைஞருக்கு ஆயுசுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்திருக்கிறது.
கோவை துடியலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் குன்னியூரை சேர்ந்த 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். அங்கு அறை எடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவம் நடந்த அன்று இருவரும் துடியலூர் அருகே கவுண்டர் மில்ஸ் சேரன் நகரில் தனிமையில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அங்கு 25 வயது இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அங்கு அவரை தனியாக வர சொன்னவருடன், மேலும் ஒருவர் நின்றிருக்கிறார். அவர்கள் இருவரும் திடீரென பீர்பாட்டிலை உடைத்து குத்திவிடுவதாக மிரட்டி 25 வயது இளைஞரின் மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.5,300 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
கனநிமிடத்தில் தனக்கு விபூதி அடித்த சிறுவர்களின் செயலால் கலங்கி போன அந்த இளைஞர், கோவை துடியலூர் போலீசில் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மோட்டார் சைக்கிள், செல்போன், பணம் பறித்தது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயது சிறுவன் மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற இளைஞர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து, அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications