ரஜினியை சீரியசாக எடுக்க வேண்டாம்.. அவர் பேசுவது யாருக்கும் புரிவதில்லை.. வைகோ கிண்டல்!
கோவை: நடிகர் ரஜினிகாந்த் பேசி வருவதை சிரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா அல்லது நியமன பதவிகளுக்காக பாஜக அணுகியதா என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. கோவை மாவட்டம் மதிமுகவின் கோட்டையாக இருக்கிறது.

திமுக ஆட்சி
அண்ணாவின் பிறந்தநாளை மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியுள்ளோம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. புதிய திட்டங்கள், செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

பாஜக மீது விமர்சனம்
மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்து உள்ளதால், பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த வரி விதிப்பால் அதானி மற்றும் அம்பானிக்கு எந்த பாதிப்பும் இல்லை.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால், மற்ற எல்லா பொருட்களின் விலைவாசியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக நாளுக்கு நாள் மக்களிடையே மத்திய அரசின் மீதான வெறுப்பு வளர்ந்து வருகிறது.

தேசியக் கொடி
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை பேச அனுமதிக்கு வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சொன்னது சரி தான். இது அவருடைய அரசியல் பண்பை காட்டுகிறது. ஆளும் அரசு அதை ஏற்க வேண்டும். அதேபோல், 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவது வரவேற்கக்கூடியது.

ரஜினிகாந்த் பற்றி கருத்து
நடிகர் ரஜினிகாந்த் சொல்வது அவருக்கும் புரிவதில்லை. வேறு யாருக்கும் புரியவில்லை. அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார். ஆட்களை சேர்த்ததுக்கு தேதி அறிவிக்கிறார். ஆனால் அடுத்த நாளே அரசியலுக்கு வரவில்லை என்று அறிவிக்கிறார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் பேசுவதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications