கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்டிம்மா நகர்ந்து போயேன்.. அடுத்த ஆள் குளிக்கணும்ல.. கலகலக்கும் தேக்கம்பட்டி

48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாம் இன்று துவங்கியது

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெகஜோதியாக மின்னுகிறது யானைகள் முகாம்!!-வீடியோ

    கோவை: குளிக்க ஷவர்.. சீரியல் லைட்டு.. என ஜெகஜோதியாக மின்னுகிறது யானைகள் முகாம்!!

    வருஷா வருஷம் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும். 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் யானைகளுக்கு ஃபுல் மெடிக்கல் செக்கப் செய்யப்படும்.

    சத்தான சாப்பாடு முதல் உடற்பயிற்சிவரை எல்லாம் தரப்படும். 48 நாள் கழித்து கேம்ப் முடிந்து திரும்பி வரும் யானைகள் படு சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.

    29 யானைகள்

    29 யானைகள்

    அதன்படி இந்த வருஷம் யானைகள் முகாம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப்படுகையில் இன்று தொடங்கியது. மொத்தம் 29 யானைகள் இந்த கேம்ப்பிற்கு வந்திருக்கின்றன.

    தீவன மேடை

    தீவன மேடை

    இதற்காக இந்த முகாமில் யானைகளுக்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கேம்ப் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் சாப்பிட டைனிங் ரூம் போல ஒரு தீவன மேடை உள்ளது. ஆனால் கிச்சன் தனி. அங்கிருந்து சாப்பாடு தயார் ஆகி இந்த தீவன மேடைக்குதான் வரும்.

    ஷவர் மேடைகள்

    ஷவர் மேடைகள்

    ஒவ்வொரு யானைக்கும் மருத்துவ கொட்டகைகள் இருக்கின்றன. இங்குதான் உடல்நலம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் கவனிக்கப்படும். இதை தவிர யானைகள் வாக்கிங் போக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த நடைபாதையை ரெடி செய்திருக்கிறார்கள். யானைகள் குளிக்க ஷவர்களுடன் கூடிய மேடைகள் உள்ளன.

    சிசிடிவி கேமராக்கள்

    சிசிடிவி கேமராக்கள்

    யானைகளுக்கு மட்டும் இல்லை, பாகன்கள் தங்குவதற்கும் ஸ்பெஷல் ஏற்பாடுகள்தான். தனி ஓய்வறை, கிச்சன் என ஒதுக்கி உள்ளனர். இவ்வளவு ஏற்பாடுகளை செய்தாலும், யானைகள் என்ன செய்கின்றன என அவைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை தவிர 14 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    சீரியல் லைட்டுகள்

    சீரியல் லைட்டுகள்

    இந்த யானைகள் இருக்கும் இடத்தில் வேறு காட்டு யானைகள் புகுந்துவிடக்கூடாது என்பதற்காக முகாமை சுற்றிலும் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மின்வேலிகளில் சீரியல் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த லைட்டுகள் தவிர, நைட் நேரங்களில்கூட பிரகாசமாக எரிய சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

     தழுவி கொள்கின்றன

    தழுவி கொள்கின்றன

    ஒரு வருஷம் கழித்து எல்லா யானைகளும் ஒன்றையொன்று சந்தித்து கொள்கின்றன. தும்பிக்கைககளால் தழுவியும், தடவியும் மகிழ்கின்றன. தகதக விளக்குகள் வெளிச்சத்தில் யானைகளின் சந்தோஷம் பவானி ஆற்றின் அருகே அரங்கேறி வருகிறது.

    English summary
    Elephant refresher camp started near Mettupalayam. There are 29 elephants attend in refresher camp.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X