'கும்பலா ரவுடிங்க இறங்கிட்டாங்க..கோவைக்கு துணை ராணுவத்தை அனுப்புங்க' - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
கோயமுத்தூர்: தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் துணை இராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் நடந்துமுடிந்துவிட்ட நிலையில், தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கோயமுத்தூர்
தமிழகத்தில் 2016-க்குப் பிறகு தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக கோயமுத்தூர் மாநகராட்சி இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வேலுமணி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம்.

காவல்துறை
திமுக என்ன சொல்கின்றதோ, அதை மட்டும்தான் காவல்துறை செய்கிறது. போலீஸ் துணையுடன் பணம், பரிசுப்பொருள், கொலுசு, ஹாட்பாக்ஸ் போன்றவற்றை திமுக விநியோகித்து வருகிறது. கோயமுத்தூரில் எந்தவிதத்திலும் தேர்தல் விதிமுறையை காவல்துறை மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் இணக்கமாக நடக்காவிட்டால் பணி மாறுதல் செய்யப்படுவீர்கள் என திமுகவினர் காவல்துறையை மிரட்டி வருகின்றனர்.

பொய் வழக்கு
இந்தத் தேர்தலில், திமுகவை எதிர்த்து வாக்கு சேகரித்தாலோ, எதிர்த்து பேசினாலோ அவர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு போடுகிறது. புகார் கொடுப்பவர்கள் மீதே காவல்துறை எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளுடன் கைகோர்த்து விட்டனர். கோவையில் இது தொடர்ந்து நடந்து வருகிறது.

ராணுவம்
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. திமுகவுக்கு துணையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். மக்கள் பயமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் துணை இராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும்'' என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் எஸ்.பி.வேலுமணி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications