குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட எஸ்.பி.வேலுமணி விடுதலை.. திமுகவினரின் ஜனநாயக படுகொலை என ஆவேச பேட்டி
கோயம்புத்தூர் : கோவையில் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்புமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் 6 மணி நேரத்திற்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது
இந்த நிலையில்தான் கோவையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை. தேர்தல் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

எஸ்.பி.வேல்மணி கைது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் கோவையில் மாநகராட்சி தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும், தேர்தலை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வேலுமணி போராட்டம் நடத்தினார். தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 8 எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவினர் விடுதலை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து எஸ்.பி வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தர்ணா செய்து வந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அனைவரும் குண்டு கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்கள் 6 மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர். காந்திபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்த நிலையில் வெளியே வந்த எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுகவினர் அராஜகம்
அப்போது பேசிய அவர்," நகர்புற தேர்தலை நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால் காவல்துறை எங்களை கைது செய்துள்ளனர். தேர்தல் விதிக்கு எதிராகவும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறை உள்ளது என குற்றச்சாட்டு வைத்தார். மேலும் தேர்தல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என அதிமுகவினர் நினைக்கிறோம், ஆனால் வெளியூரில் இருந்து இறக்கப்பட்ட திமுகவினர் இன்னும் வெளியெற்றப்படவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்திகுத்து, அடிதடி நடைபெற்று வருகிறது.

ஜனநாயக படுகொலை
தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குண்டர்களை வைத்தும் , ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு தேர்தலை திமுகவினர் சந்திப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளை தாமதம் படுத்தாமல் யார் வெற்றி பெற்றார்களே அவர்களை அறிவிக்க வேண்டும் எனவும் மாற்றி அறிவிக்க கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் கூடுதலாக தேர்தல் அதிகாரி நாகராஜன் ஐ.ஏ.எஸ் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடும் வந்தால்தான் தெரியும் என தெரிவித்தார்." என தெரிவித்தார்.
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications