தங்க நகை பூங்கா கோவையில்.. தங்கத்துக்கு 100% கியாரண்டி.. பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ்
கோவை: கோவையில் தங்க நகை பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.. அத்துடன், இந்த தொழிற்பூங்காவில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு அரசு சார்பாக தனி முத்திரை பதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
தமிழ்நாட்டில் ஏராளமான பூங்காக்களை தமிழக அரசு தொடங்கி வருகிறது.. அந்தவகையில், ஐடி முதல் பல்வகை பூங்காக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுடன், அவைகளின் கட்டிடப் பணி முடிந்ததுமே ஒவ்வொன்றாக துவங்கி வைத்து வருகிறார்.

கோவையில் தங்க நகை பூங்கா
அந்தவகையில், கடந்த நவம்பர் மாதம் கோவையில் அரசு பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது குறித்த ஆய்வு நடத்துவதற்காக, முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார்.. அப்போது பல்வேறு தொழில்துறையினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் துறைசார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க கோரி தங்க நகை தொழில் சார்ந்தோர் பல காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அன்றைய தினமும் முதலமைச்சரிடம் இதுகுறித்த கோரிக்கையை அத்துறை சார்ந்தவர்கள் மீண்டும் கோரிக்கையாக விடுத்திருந்தனர்.
ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
இதையடுத்து, பொற்கொல்லர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய கெம்பட்டி காலனி பகுதிக்கு நேரடியாக சென்று ஸ்டாலின் ஆய்வு நடத்தியதுடன், அவர்களுடைய குறைகள், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பிறகு அன்றைய தினமே கோவையில் தங்கநகை தொழிலாளர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் பயன் பெறும் வகையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.
கோவை குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் கட்டப்படும். இதில் NABL அங்கீகாரம் கொண்ட ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். 2000 பேர் நேரடியாகவும், 1500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை
இதையடுத்து, வருகிற 8ம் தேதி குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 2.5 ஏக்கர் நிலத்தில் தங்க நகை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க உள்ளதாகவும் வெளிவந்துள்ளது.
இதையடுத்து கோவை கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.. அத்துடன், இந்த தொழிற்பூங்காவில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு அரசு சார்பாக தனி முத்திரை பதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இந்த தங்க நகை பூங்கா அமையும் பட்சத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில், பணிபுரியும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும், அதிக மதிப்புள்ள நகைகளை தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் எளிதாக கிடைக்கும் என தெரிகிறது.
தங்க நகை தொழில் பூங்கா
முதல் கட்டமாக, நிலத்தின் மதிப்புடன் சேர்த்து, ரூ.81.40 கோடி செலவில் தங்க நகை தொழில் பூங்கா கட்டுவதற்கு, கடந்த ஜூலை மாதம் டெண்டர் கோரப்பட்டது. கட்டுமான பணிக்கான திட்ட செலவு, 45 கோடி ரூபாய் என்றும், 5 தளங்களுடன் கட்டப்படும் தங்க நகை தொழில் பூங்காவில், 300 தொழிற்கூட அலகுகள், பாதுகாப்பு பெட்டகம், பொது வசதி மையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன.
இந்த தங்க நகை பூங்கா அமையும் பட்சத்தில், கோவை மாவட்டத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில், பணிபுரியும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் நிரந்தர வருமானம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும், அதிக மதிப்புள்ள நகைகளை தயாரிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட போதிய உள்கட்டமைப்பு வசதிகளும் எளிதாக கிடைக்கும் என தெரிகிறது.
பிரத்யேகமான பேட்டி
இந்நிலையில், கோவை கைவினை தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர், தனியார் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
அதில், அவர் சொல்லும்போது, "தங்கத்தை பொறுத்தவரை, கடந்த 40 ஆண்டு காலமாக கோயம்புத்தூர் நகைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.. ஒருகாலத்தில் தங்கம் செய்வது, ஒரு குடிசை தொழிலாக இருந்து வந்தது.
அந்தவகையில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியும், நிரந்தர வேலை வாய்ப்புக்குண்டான அரசு மானியங்களுடன், இந்த தங்க நகை பூங்காவை முதலமைச்சர் அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகும்..
தமிழக அரசின் தீபாவளி போனஸ்
கடந்த தீபாவளிக்கு கோவை வந்த முதல்வர், பொற்கொல்லர்களின் சிரமத்தை நேரில் கண்டு, அன்றைய தினமே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.. இப்போது தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுவதன்மூலம், எங்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் தந்துள்ளது.. இதனால் பொற்கொல்லர்களின் நிலையான வருமானத்துக்கு அரசு வழிவகுத்துள்ளது.
இந்த தங்க நகை பூங்காவில் பாதுகாப்பு கருவி, சிசிடிவி, 350 பட்டறைகள் அமைய உள்ளன.. ஒவ்வொரு பட்டறையும் கிட்டத்தட்ட 500, 1000 சதுர அடி உள்ளன.. இதனால் 4000 பேரை வரை நேரடி தொழில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.. மேலும், நாங்கள் கேட்கும் மானியத்தையும் அரசு தர போவதாகவும் உறுதி தந்துள்ளது.. அதுமட்டுமல்லாமல் பொற்கொல்லர்களுக்கு பிஎஃப் உட்பட வசதிகள் செய்து தரப்படுகின்றன..
நகை பாதுகாப்பு தன்மை
மேலும் இதில் நகை பாதுகாப்பு தன்மை 100 சதவீதம் உள்ளது. சொக்கத்தங்கத்தை 916 ஆக மாற்றி. ஆபரணத் தங்கமாக மாற்றும்போது, அதிலுள்ள முறைகள் பின்பற்றப்பட்டு, ஹால்மார்க் முத்திரை போட்டு வெளியேறும் என்பதால் முழு பாதுகாப்பு கிடைக்கிறது..
சமீபகாலமாகவே தங்கம் விலை ஏற்றம் காரணமாக, நிறைய திருட்டு சம்பவங்கள் நடக்கிறது.. இவைகளில் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முடிவதில்லை.. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவும், பொற்கொல்லர்களின் தற்கொலை முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தங்க நகை பூங்கா உதவியாக இருக்கும்.. மொத்தத்தில் நிரந்தர வேலைவாய்ப்புக்கு தங்க நகை பூங்கா அச்சாரமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications