என்ன பதில் சொல்லப்போகிறது சட்டமன்றம்.. கொங்கு ஈஸ்வரனின் பேச்சால் கொதித்து போன வானதி சீனிவாசன்
கோவை: கொங்கு ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம் தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் , சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவருவதற்கு அனைத்து மாநிலங்களும் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு ஏற்கும் என்றும் அனைத்து விஷயத்திலும் முதல் ஆளாய் கேள்வியை எழுப்பும் தமிழக அரசு முதல் கோரிக்கையை வைக்கட்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை மெட்ரோ ரயில்
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மிகவும் எதிர்பார்த்த டாஸ்மாக் கடை குறைப்பு ஒரு வார்த்தை கூட பேசப்பட வில்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து கவர்னர் உரையில் பேசப்படவில்லை. இது பற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும் முதல்வர், முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது.

கோவை விமான நிலையம்
பொறுப்பான அரசாக இந்த அரசை பார்க்கின்றோம். பல்வேறு திட்ட பணிகள் வேகமாக நடைபெற வேண்டிய காலம் இது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது. மாநில அரசு வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும், மாநில அரசு வெள்ளை அறிக்கை கொடுத்து ,மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போக்கூடாது.

ஈஸ்வரன் பேச்சு
சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து எடுத்ததை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசி இருக்கின்றார். ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம். தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் , சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது .

நான் புதிது
ஜெய்ஹிந்த் வார்த்தை குறித்து பேசியற்கு ஏன் உடனே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று கேட்கிறீர்கள்(செய்தியாளர்கள் கேட்டனர்) பா.ஜ.க சட்டமன்ற தலைவர்
நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் இருந்தது. எங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் வேண்டும். சட்டமன்றத்திற்கு நான் புதிது என்பதால் உடனடியாக இதை புரிந்து எதிர்வினையாற்றவில்லை. இது தொடர்பாக உடனடியாக கட்சி தலைவர்களிடம் பேசிய பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

வானதி கேள்வி
மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்களை, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை தான் தமிழக அரசு பொருளாதார குழுவில் நியமித்து உள்ளது. தமிழக அரசு. எனினும மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து தான் செயல்பட வேண்டும், இணைந்து செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

குண்டர் சட்டம் ஏன்
சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை வெளியிட்ட கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது எனவும், இதற்கு முன்பு பிரதமரை பற்றி திமுக முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர், பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்தப் பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் , அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications