கமல் சொத்து மதிப்பு 176 கோடி... மகேந்திரனுக்கு ரூ. 170 கோடி - மநீம கட்சியின் கோடீஸ்வர வேட்பாளர்கள்

கமல்ஹாசனுக்கு 176 கோடியே 99 லட்சம் ரூபாய் சொத்துக்கள் உள்ளன. 50 கோடி ரூபாய்க்கு கடனும் உள்ளதாக பிராமணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Subscribe to Oneindia Tamil

கோவை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று வேட்புமனு தாக்கல் செய்த அவர்,பிரமாணப் பத்திரத்தில் தனக்கு இருக்கும் சொத்து மதிப்பு விவரங்களை கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனுக்கு 176 கோடியே 99 லட்சம் ரூபாய் சொத்துக்கள் உள்ளன. 50 கோடி ரூபாய்க்கு கடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன். மநீம துணைத்தலைவர் மகேந்திரனுக்கு 170 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் உள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்த நிலையில் வளர்பிறை முகூர்த்தநாளான இன்று முதல்வர் வேட்பாளர்கள் ஐந்து பேரும் அவரவர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரன்,உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ததால் தமிழக அரசியல் களம் களைகட்ட ஆரம்பித்து விட்டது.

கமல் வேட்புமனு தாக்கல்

கமல் வேட்புமனு தாக்கல்

கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களம் காணும் கமல்ஹாசனும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக கடமையினை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பினை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்றது. இது என் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான், எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும் செழுமையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம் என்றார்.

அசையும் அசையா சொத்துக்கள்

அசையும் அசையா சொத்துக்கள்

கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள பிராமணப்பத்திரத்தில் 45 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாகவும் 131கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மொத்த சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய உள்ளது.

கார்களும் லண்டன் வீடும்

கார்களும் லண்டன் வீடும்

கடன் 50 கோடி ரூபாய்க்கு உள்ளது. 2 கோடி மதிப்புள்ள லெக்சஸ் மாடல் காரும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபுள்யூ காரும் உள்ளது. லண்டனில் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

தொழிலதிபர் மகேந்திரன்

தொழிலதிபர் மகேந்திரன்

கோவை சிங்காநல்லூர் தொகுதி மநீம வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.170 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகேந்திரனின் சொந்த ஊர் பொள்ளாச்சி. தொழிலதிபரான இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.
இவர், கடந்த 2019ஆம் ஆண்டு கோவை லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் சார்பில், வேட்பாளராக களம் இறங்கி, வாக்கு எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்தார்.

கோடீஸ்வர வேட்பாளர்

கோடீஸ்வர வேட்பாளர்

தற்போது மகேந்திரன் முதல் முறையாக சிங்காநல்லுார் தொகுதியில் எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடுகிறார். மகேந்திரன் தனது சொத்து மதிப்பு ரூ.170 கோடி என பிராமணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவரது அசையும் சொத்து ரூ.10 கோடி, அசையா சொத்து மதிப்பு 160 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+