டாஸ்மாக் கடையடைப்பு! 10 லட்சம் பேர் குடிச்சிருக்க மாட்டாங்க! ரொம்ப சந்தோஷம்! அமைச்சர் விக்னேஷ்

Subscribe to Oneindia Tamil

கோவை: மதுபாட்டில் திரும்ப ஒப்படைக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு 10 லட்சம் பேராவது குடிக்காமல் இருந்திருப்பார்கள். இதில் எனக்கு மகிழ்ச்சியே என மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை குறிச்சி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: கடந்த காலத்தில் இருந்த அமைச்சர் போல நான் இருந்திருந்தால் டாஸ்மாக் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முறை போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

டாஸ்மாக் ஊழியர்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என கடந்த கால ஆட்சியாளர்கள் அறிவுறுத்தியதே தற்போதைய பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. காலி மதுபாட்டில்களை ஊழியர்கள் முறையாக கையாண்டதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

Minister Vignesh

காலி மதுபாட்டில்கள்

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு காலி மதுபாட்டில்கள் திரும்ப வரவில்லை. அதைத்தான் அரசு கேள்வி எழுப்புகிறது. பாட்டில்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான பணம் வரவில்லை. கடந்த காலத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்திருந்தால், அந்தப் பணம் அவரது வீட்டிற்கே சென்றிருக்கும்.

மிகப் பெரிய ஊழல்

தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் காலி மதுபாட்டில்கள் விவகாரம்தான். பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை வெளிப்படையாகவும், முறையாகவும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் எந்த இடத்தில் வாங்கிய மதுபாட்டில்களையும், மாநிலத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் திரும்ப ஒப்படைக்கும் நடைமுறை இன்னும் 20 நாட்களில் அமலுக்கு வரும். இதற்காக 40,048 இயந்திரங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.34 ஆயிரம் சம்பளம், வார விடுமுறை, மருத்துவக் காப்பீடு மற்றும் பண்டிகைக் காலங்களில் ரூ.20 ஆயிரம் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் சீருடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் துறை

டாஸ்மாக் துறையின் பிரச்சினைகளால் நானும் சில நாட்கள் தூக்கமின்றி இருந்துள்ளேன். மதுபாட்டில்களில் கட்டாயம் அதிகபட்ச சில்லறை விலை (MRP) குறிப்பிடப்பட வேண்டும். மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம் பாயும்

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. மீறினால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். சட்டம் கட்டாயம் பாயும். இதுவரை 960 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடையை மூடச் சொல்லிய நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரூ 60 ஆயிரம்

கடைகளை மூடிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 60 சதவீதம் அளவிற்கு காலி பாட்டில்களை திரும்பப் பெற்றவர்கள், தற்போது ஏன் அவற்றை வாங்க மறுக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அமைச்சர், டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுவதாகவும், காலி மதுபாட்டில்களை வாங்குவதற்காக தனியாக கூடுதல் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாற்று பணியாளர்கள்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 500 முதல் 1,000 சதுர அடி அளவில் கடைகளை அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுப் பணியாளர்களை நியமித்து கடைகளை திறக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

தனியார் பார்கள்

டாஸ்மாக் கடைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட கடையின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும். புகார்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தனியார் பார்கள் குறித்து விரைவில் பட்டியல் தயாரிக்கப்படும்.

பார் உரிமம் பெறுபவர்கள், பார்களை உள்வாடகைக்கு விட முடியாது. இனி கடந்த காலங்களைப் போல முறைகேடாக சம்பாதிக்க முடியாது. நியாயமான முறையில் மட்டுமே வருமானம் ஈட்ட முடியும். டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவுகளைப் போன்ற சூழ்நிலைகள் உருவானால், டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலிக்க முடியும்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. நேற்று டாஸ்மாக் கடையடைப்பால் 10 லட்சம் பேராவது குடிக்காமல் இருந்திருப்பார்கள் என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி. அதிலும் 150 முதல் 200 ரூபாயை வீட்டில் கொண்டு போய் கொடுத்திருப்பார்கள் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+