ஸ்டாலின் கைப்பிடித்து அழைத்து சென்ற வீரமணி.. கோவை பெரியார் அறிவுலகத்தில் நா தழுதழுக்க உணர்ச்சிவசம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிவிட்டன. திமுக ஆட்சிக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையும், முடக்கும் போக்கிலும் தவெக ஈடுபடுவதாக புகார் உள்ளது. கோவையில் ஸ்டாலின் கனவுத்திட்டமான பெரியார் அறிவுலகத்தை விஜய் கடந்த மாதம் திறந்தார். ஸ்டாலினுக்கு தி.க சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. ஸ்டாலினுடன் வீரமணி பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார். ஸ்டாலினின் கைப்பிடித்து அழைத்து சென்ற வீரமணி, 84 ஆண்டு போது வாழ்வில் இப்படி ஒரு வாய்ப்பை பெற்றதில்லை. ஆயிரம் ஆண்டுகள் இந்த சாதனை நிலைத்து நிற்கும் என கூறினார்.

கோவை காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, செய்யப்பட்ட இது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத்திட்டமாகும். திமுக ஆட்சியிலேயே திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் தாமதம் ஆனதால் திறக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு எஞ்சிய பணிகள் நடந்தன. கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

MK Stalin

ஆயிரம் ஆண்டு நிலைத்து நிற்கும்

திமுக திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில் என்ன பெருமை என்று ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் பெரியார் பெயரில் அறிவுலகம், நூலகம் கட்டியதற்காக ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக ஸ்டாலின் கோவை வந்துள்ளார். முன்னதாக ஸ்டாலின் திக தலைவர் வீரமணியுடன் பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார்.

ஸ்டாலினின் கையை பிடித்து வீரமணி ஆவலுடன் பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார். இதுகுறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாம் அனைவரின் வாழ்நாளிலும் இது மிக முக்கியமான நாள். இந்த அதிசயத்தை செய்தவர் இங்கு இருக்கிறார். அவருடன் நாம் அனைவரும் மகிழ்ந்து நிற்கிறோம். இந்த சாதனைக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு நிச்சயமாக இருக்கும்.

ஸ்டாலின் நிலைத்து நிற்பார்

இது வெறும் நூலகம் அல்ல அறிவியலும் இருக்கிறது. இங்கு மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காது, பெரியார் கண்ட இனிவரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் சொல்லும் போது, எப்படி இருக்கும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்துள்ளார். எனது வாழ்நாளில், 84 ஆண்டுகள் பொது வாழ்வில் உள்ளேன். ஆனால் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை நான் பெற்றது இல்லை.
எனவே அனைவரின் சார்பில் கோடாடான கோடி நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

பெரியாரின் அறிவுலகம் பரவட்டும். மக்களிடம் அறியாமை நீங்கட்டும். ஜாதி மதம் பேதம் இல்லாமல் எல்லோரும் வரும் இடம் இது தான். இதை நிர்மானித்தவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார், திராவிடம் வாழும் நூலகம் பெருகும்" என்று
உணர்ச்சிவசத்துடன் சொன்னார். மாலை பாராட்டு விழாவில் ஸ்டாலின், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+