Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கெட்டகாலம் பொறக்குது” பீதி கிளப்பிய குடுகுடுப்பைகாரர்.. மாற்றுத்திறனாளி மகளைக் கொன்று தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை: தோஷம் இருப்பதால் வீட்டில் உள்ள நபர்களுக்கு கை கால் விளங்காமல் போகும் எனக்கூறிய குடுகுடுப்பைக்காரர்கள் பேச்சால் அச்சமடைந்த தாய் தனது மாற்றுத்திறனாளி மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பூஜை மாந்திரிகம் செய்வதாக பணம் பரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டில் புதையல் உள்ளது, வீட்டில் உள்ள நபர்களுக்கு தோஷம் உள்ளது அதனை கழிக்க பரிகாரம் செய்ய வேண்டும் என ஆசை காட்டியும் பயம் காட்டியும் மோசம் செய்யும் டுபாக்கூர் சாமியார்களால் பணத்தை இழந்த மக்கள் தமிழகத்தில் ஏராளமானோர் உள்ளனர்.

அதனை விட பயம் காட்டி பெண்களிடம் அத்துமீறும் சாமியார்கள் கம்பிகளுக்கிடையே களி தின்னும் சுவாமிகளின் எண்ணிக்கையே நூறைத்தாண்டும். சில நேரங்களில் நரபலி என்னும் கொடூரமும் நடைபெறுவது வேதனையின் உச்சம்.

டுபாக்கூர் மந்திரவாதிகள்

டுபாக்கூர் மந்திரவாதிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 80 வயது முதியவர் ஒருவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால் அவரது மனைவி தனது உறவினர் ஒருவரின் பிஞ்சு குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அந்த முதியவர், அவரது மனைவி ஐடியா கொடுத்த டுபாக்கூர் மந்திரவாதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தோஷம் உள்ளது, வீட்டில் உள்ளவர்களுக்கு கை கால் விளங்காமல் போகும் என இரவு நேரத்தில் பயம் காட்டிய குடுகுடுப்பைக்காரரால் தாயும் மகளும் பரிதபமாக இறந்து போன அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையில் அதிர்ச்சி

கோவையில் அதிர்ச்சி

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி. கணவர் திருமூர்த்தி சில வருடங்கள் முன்பு இறந்து விட்ட நிலையில் அவருடைய மகன் சசிக்குமார் திருமணமாகி மனைவியுடன் சரவணம்பட்டியில் தங்கி ஐ.டி கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். தனலட்சுமி சிறிது மன நிலை சரியில்லாத மகள் சுகன்யா உடன் வசித்து வருகிறார். இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

பீதி கிளப்பிய குடுகுடுப்பைக்காரர்

பீதி கிளப்பிய குடுகுடுப்பைக்காரர்


இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் தனலட்சுமி வீட்டில் இருந்தபோது ராத்திரி ரவுண்ட்ஸ் வந்த குடுகுடுப்புக்காரர் ஒருவர், கொட்டகாலம் பொறக்குது கெட்ட காலம் பொறக்குது இந்த விட்டுல தோஷம் இருக்கு தோஷம் இருக்கு என கூறியதோடு, அதற்கு பரிகாரம் செய்யவில்லை என்றால் மகனுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும் என்றும், யாராவது ஒருவருக்கு கை கால்கள் விளங்காமல் போகும் என பீதி கிளப்பும் வகையில் கூறிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மகளைக் கொன்று தாய் தற்கொலை

மகளைக் கொன்று தாய் தற்கொலை

ஏற்கனவே கனவணை இழந்து , மனநலம் பாதிக்கப்பட்ட மகளால் மன உளைச்சலில் இருந்த நிலையில், மகனைப் பிரிவதாக மருமகள் நோட்டீஸும் அனுப்பியுள்ளார். போதாக்குறைக்கு தன் பங்கிற்கு குடுகுடுப்பைக்காரரும் பீதி கிளப்ப மனவருத்தம் அடைந்துள்ளார் தனலட்சுமி. மேலும் அவர் மகன்,மகளை நினைத்து வருத்தம் அதிகமான நிலையில் நேற்று இரவு மகள் சுகன்யாவிற்கு பாலில் கலந்து விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்நிலையில் தனலட்சுமியின் மகன் தொடர்ந்து போன் செய்த போதும் எடுக்காததால் அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது கதவு திறந்த நிலையில் இருந்துளது உள்ளே படுக்கையில் மகளும், தாய் தூக்கில் தொங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்தே மகன் சசிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து துடியலூர் போலிஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் மகளிர் காவல் துறையினர் சம்வவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பீதி கிளப்பிய குடுகுடுப்பைகாரரையும் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு பிடித்து விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+