கோவை அருகே காயங்களுடன் வலம்வந்த காட்டு யானை உயிரிழப்பு- நடப்பாண்டில் 20வது யானை மரணம்!
கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயங்களுடன் வலம்வந்த காட்டு ஆண் யானை வியாழக்கிழமை மாலை உயிரிழந்தது. நடப்பாண்டில் கோவை வனப்பகுதியில் 20வது காட்டு யானை உயிரிழந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை காலில் படுகாயத்துடன் சுற்றி திரிந்தது. இதனால் இந்த காட்டு யானைக்கு கும்கி யானைகள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதனையடுத்து அந்த வனப்பகுதிக்கு 2 கும்கி யானைகள், மருத்துவர்கள் குழு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் காட்டு யானை திடீரென வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து அந்த யானையை சமவெளிக்குள் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வனப்பகுதியில் அந்த காட்டு யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. கோவை வனப்பகுதியில் இந்த ஆண்டில் உயிரிழந்த 20வது யானை இது. யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கிருஷ்ணகிரியில் எச்சரிக்கை
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றையானை கிராமப்பகுதிகளில் ஆக்ரோசமாக சுற்றித் திரிவதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரண்டப்பள்ளி சுற்றியுள்ள கிராமங்களான குண்டு குறுக்கை , கொற குறுக்கி , கானலட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடு மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் இரவு நேரங்களில் தோட்டங்களில் காவல் காக்க செல்ல வேண்டாம் எனவும் காலையில் விடிந்தபின் விவசாய தோட்டத்திற்கு செல்ல வேண்டு என்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications