கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. இணை நோயாளிகளுக்கு.. பிளாஸ்மா சிகிச்சையால் பலன் இல்லை.. டாக்டர்கள் கருத்து

Google Oneindia Tamil News

கோவை: இணை நோயாளிகளுக்கு பிளாஸ்மா.., பயனளிக்கவில்லை... மருத்துவர்கள் கருத்து!!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை வழங்கப்பட்டதில் இணை நோய் இருப்பவர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை. பிளாஸ்மா தெரபி அளித்த பின்னரும் இணை நோயாளிகள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார். இதையடுத்து ஒன்பது கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்கள் ஒன்பது பேரும் குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Plasma therapy failed with Comorbid Corona patients

இதுகுறித்து பிளாஸ்மா சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், ''கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டது. ஒருவரிடம் இருந்து 400 எம்எல் ரத்தம் எடுக்கப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு முன்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ரத்தம் இரண்டு நோயாளிகளுக்கு அளிக்கலாம்.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்தை நோக்கி இந்தியா- பிரேசிலை நெருங்கியது

இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு வேறு இணை நோய் ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும். இணை நோய் இருந்த இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு பலனளிக்கவில்லை. இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து. இணை நோய் இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Plasma therapy failed with Comorbid Corona patients
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X