ஈரக்குலையே நடுங்குதே.. காரை வழிமறித்து சுத்தியால் தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்.. கோவையில் பயங்கரம்
கோவை: கோவையில் அருகே சினிமாவையே மிஞ்சும் வகையில் நள்ளிரவில் காரை வழிமறித்து தாக்கி, கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த முகமூடிக் கொள்ளையர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக். விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் பெங்களூரில் கணினி உதிரி பாகங்கள் வாங்கி கொண்டு தனது நண்பர்களுடன் கடந்த 13ம் தேதி இரவில் புறப்பட்டார். அவர் கோவை ழவியாக காரில் கொச்சி சென்று கொண்டிருந்தார்.

இவர்களின் கார் கடந்த 14ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவை அருகே மதுக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதாவது கோவை - பாலக்காடு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவர்கள் சென்ற காரை 2 கார்கள் பின்தொடர்ந்து வந்தன. இதனால் அஸ்லாம் சித்திக் மற்றும் அவரது நண்பர்கள் பயந்துப்போயினர். காரை நிறுத்தாமல் அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இந்த வேளையில் திடீரென்று அவர்களின் காரை முந்திய கார் குறுக்கே வந்து நின்றது. இதனால் வேறு வழியின்றி அஸ்லாம் சித்திக் காரை நிறுத்தினார்.
இந்த வேளையில் காரில் இருந்து 6 பேர் கும்பல் இறங்கியது. அவர்கள் முகத்தில் முகமூடி மற்றும் துணி கட்டியிருந்தனர். அதோடு கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அஸ்லாம் சித்திக் பயணித்த காரின் மீது தாக்குதல் நடத்திது. சுத்தியலால் அந்த கும்பல் கார் கண்ணாடியில் ஓங்கி அடித்தது. இதில் கார் கண்ணாடி சிதைந்த நிலையில் அஸ்லாம் சித்திக் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சுதாரித்தவர்கள் காரை பின்நோக்கி எடுத்து சென்று வேகமாக முன்நோக்கி இயக்கி அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுதொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள்,அவர்களின் பெயர்கள் சிவதாஸ், ரமேஷ் பாபு, விஷ்ணு, அஜய்குமார் என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க முயன்றதை அஸ்லாம் சித்திக் தரப்பு காரில் இருந்தபடியே செல்போனில் வீடியோவாக பதிவு செய்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications