கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டணி விவகாரத்தில் பாஜகவுக்கு யாருடனும் தகராறு இல்லை- மத்திய அமைச்சர் பொன்னார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணி விவகாரத்தில் யாருடனும் தகராறு இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ

    கோவை: பாஜகவுக்கு கூட்டணி விவகாரத்தில் எந்த கட்சியுடனும் யாருடனும் பிரச்சினை இல்லை என மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் தேர்தல் வருவதற்கான அறிகுறி.

    அமித்ஷா

    அமித்ஷா

    தேர்தல் வரும்போது இதுபோல நடக்கும். தமிழகம் மிக முக்கியமான மையமாக பாஜக நினைக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகை பாஜக தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும்.

    தூண்

    தூண்

    கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டுள்ளோம். அது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. கூட்டணிக்காக சில கட்சிகள் தேமுதிக காலில் விழுவதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியிருக்கிறார். விழுந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். மேலும் ஒரு தூணோடு, இன்னோரு தூண் நின்றால் தான் பலம் பொருந்தியதாக இருக்கும்.

    சகோதரர்

    சகோதரர்

    ஒரு தூணில் இன்னோரு தூண் விழுந்தால், அது பலம் அல்ல. தம்பிதுரை கருத்துகள் கூட்டணிக்கு இடையூறாக இருக்கிறதா என்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தம்பிதுரை எனக்கு சகோதரர். தினமும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    பாஜகவுக்கு கூட்டணி விவகாரத்தில் எந்த கட்சியுடனும் யாருடனும் பிரச்சினை இல்லை. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படுமென அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறியிருப்பது சரியாக இருக்கும். கூட்டணி தொடர்பாக இன்று அறிவிக்க வாய்ப்பில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English summary
    Union Minister Pon RadhaKrishnan says that we have no issues with any party regarding alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X