Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனாதிபதி திரௌபதி முர்மு குன்னூர் பயணம் திடீர் ரத்து.. உடனே டெல்லி புறப்பட்டார்.. காரணம் என்ன?

ஜனாதிபதி திரௌபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

கோவை : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். முதல் நாளான நேற்று காலை மதுரை வந்த குடியரசு தலைவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.

அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து கோவை சென்ற குடியரசுத் தலைவர், ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கு பெற்றார்.

மதுரையில் திரௌபதி முர்மு

மதுரையில் திரௌபதி முர்மு


குடியரசுத் தலைவரான பிறகு திரௌபதி முர்மு, நேற்று முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார். இதற்காக, டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு நேற்று காலை 11.40 மணியளவில் மணிக்கு வந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து காரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

மீனாட்சி அம்மனை தரிசித்த ஜனாதிபதி

மீனாட்சி அம்மனை தரிசித்த ஜனாதிபதி

பின்னர், அம்மன் சந்நிதிக்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓய்வறையில் குடியரசுத் தலைவர் சில நிமிடங்கள் ஓய்வெடுத்தார். பின்னர், 12.05 மணிக்கு அம்மன் சந்நிதி வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் குடியரசு தலைவருக்கு மேளதாளம், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனை ஏற்ற குடியரசுத் தலைவர் மீனாட்சி அம்மனை தரிசித்தார். பின்னர் சுவாமி சந்நிதி, கொடிமரம், துர்க்கை அம்மன் சந்நிதிக்கு சென்றார். கோயில் சிற்பங்கள், கலைநயம் மிக்க தூண்களை சிறிது நேரம் நின்று பார்த்து ரசித்தார்.

சர்க்யூட் ஹவுஸ்

சர்க்யூட் ஹவுஸ்

மீனாட்சியம்மன் கோயில் சார்பாக குடியரசுத் தலைவருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தாழம்பூ குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. கோயிலில் உள்ள விஐபி வருகைப் பதிவேட்டில் கோவில் பற்றிய குறிப்புகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுதி கையெழுத்திட்டார். தரிசனத்தை முடித்துக்கொண்டு பாதுகாப்பு வாகனங்கள் சூழ அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

ஈஷா சென்ற ஜனாதிபதி

ஈஷா சென்ற ஜனாதிபதி

அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமானம் நிலையம் சென்றார். அங்கிருந்து கோவைக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா


தொடர்ந்து, லிங்க பைரவி கோவிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பின்னர் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார். பின்னர், நடைபெற்ற ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், நேற்றிரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.

பயணம் திடீர் ரத்து

பயணம் திடீர் ரத்து

இன்று காலை ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்று போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் கடும் மேகமூட்டம் நிலவி வருவதால், ஜனாதிபதி திரௌபதி மும்முவின் நீலகிரி பயணம் ரத்து செய்யப்பட்டது.

டெல்லி புறப்பட்டார்

டெல்லி புறப்பட்டார்

மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+