கோவை சிறையில் இருந்து தப்பி சத்தியமங்கலத்தில் பதுங்கிய கோழிக்கார ராகவன்..டிரோன் மூலம் தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. சிறை கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. தேனி தேக்கம்பட்டி சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி சென்று, பிறகு கைது செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் ராகவன் என்கிற கைதி கடந்த வாரம் தப்பினார். 3 நாட்களாக காவல்துறையினருக்கு தண்ணி காட்டி வந்தார். சத்தியமங்கலம் காட்டு பகுதியில் அவரை சேஸ் செய்து காவல்துறை தூக்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் என்கிற கோழிக்காரன் (வயது 25). இவர் மீது தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரை அன்னூர் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அன்னூர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நள்ளிரவு கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார். சிறை வாளாகத்தில் இருந்து கைதி ராகவன் திடீரென தப்பி ஓடினார்.

ragavan-prisoner-escaped-from-coimbatore-central-prisoner-arrested-in-forest

கோவை சிறையில் எஸ்கேப்

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பி பிடிபட்ட அதிர்ச்சி ஓய்வதற்குள் இந்த சம்பவம் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் எச்சரித்தும் சிறை பாதுகாப்பில் மெத்தனபோக்கு நிலவுகிறது. இத்தனைக்கு கோவை மத்திய சிறையில் 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தேனி கிளை சிறை போல அல்ல. இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் மீறி ராகவன் தப்பித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை, தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அவரை 3 நாட்களாக காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராகவன் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

காட்டு பகுதியில் திக் திக்

திருட்டு வழக்கில் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக போலீசார் ராகவனை கைது செய்தனர். விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்தனர். அப்போது அன்னூர் அடுத்த கணுவ கரையில் இயற்கை உபாதை என்று கூறி போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார். பிறகு கண் இமைக்கும் நேரத்தில் வேனிலிருந்து இறங்கி தப்பி ஓடினார். அவரை காவல்துறையினர் அன்னூரில் வைத்து கடந்த வாரம் கைது செய்தனர். மத்திய சிறையிலேயே தண்ணி காட்டி தப்பித்தார்.

தனிப்படை மூலம் ராகவனை பல இடங்களில் தேடினர். தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் காட்டு பகுதி ராகவனுக்கு அத்துப்பிடி. அவர் அங்கு ஒளிந்திருப்பார் என்கிற சந்தேகத்தில் காவல்துறையினர் டிரோன் மூலம் தேடினார்கள். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,411.6 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. அதில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நினைத்தது போலவே அவரை சத்தியமங்கலம் காட்டு பகுதியில் பதுங்கியது தெரிந்தது.

சிக்கிய ராகவன்

மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கர், அன்னூர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் சத்தியமங்கலம் காட்டு பகுதிக்கு நேற்று இரவு விரைந்தனர். அங்கு ராகவனை விரட்டி சென்று பிடித்தார்கள். கைது செய்த ராகவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். பிறகு அவரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணி நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+