புது வீடு கட்டி வீடியோ போட்ட யூடியூப் பிரபலம்..பார்த்துவிட்டு கொள்ளையடிக்க வந்த நபர்-கோவையில் திடுக்
கோவை: கோவையில் வசித்து வரும் பிரபல யூடியூபரின் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. புது வீடு கட்டிய வீடியோவை யூடியூபில் பகிர்ந்து இருந்ததை பார்த்து கொள்ளையடிக்கும் ஆசையில் புதுவையில் இருந்து கொள்ளையன் வந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் பெருகிவிட்டதால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற வீடியோ தளங்களை அதிகம் பேர் விரும்பி பார்க்கின்றனர்.
அதேபோல் யூடியூப்களில் வீடியோ வெளியிடும் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்கு கணிசமான தொகையை யூடியூப் நிறுவனம் வழங்கி வருகிறது.

யூடியூப் வீடியோக்கள்
இதனால், சமையல், தொழில்நுட்பம், உணவு ரிவியூ, பைக் ரிவியூ என வீடியோ கண்டெண்ட் கொடுப்பவர்கள் எண்ணிக்கைக்கு பஞ்சமே இல்லை. பல யூடியூபர்கள் மிகவும் பிரபலமாகவும் உள்ளனர். பிரபலமான யூடியூபர்கள் பலரும் தங்கள் செல்லும் இடங்கள் மற்றும் ஹோம் டூர் என பல வீடியோக்களையும் வெளியிடுகின்றனர். இதை ஏராளமானவர்கள் ரசித்து பார்க்கவும் செய்வதால் இதுபோன்ற வீடியோக்களும் தற்போது அதிகரித்து வருகிறது.

கார், சொகுசு வீடு என..
சினிமா நட்சத்திரங்களுக்கு போட்டியாக வலம் வரும் அளவுக்கு புகழ் வெளிச்சமும் அவர்களுக்கு கிடைக்கிறது. சப்ஸ்கிரைபர்கள் கூட.. கூட.. யூ டியூபர்களின் வருவாயும் அதிகரித்து விடுகிறது. இதனால் கார், சொகுசு வீடு என சகல வசதிகளுடன் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சுஹைல் என்பவர் சுஹைல் விலாகர் மற்றும் சைபர் தமிழா ஆகிய இரு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பாபினா. இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.

புதிதாக கட்டியுள்ள வீட்டின் வீடியோ
சுஹைல் நடத்தி வரும் யூடியூப் சேனல்களில் பல வீடியோக்களை போட்டுள்ளார். தனது வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்வுகள், சிறுவர்களின் விளையாட்டு தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சொந்த வீடு, 2 கார்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வசதியான வாழ்க்கையும் வாழ்ந்து வருவதாக சுஹைல் கூறியதாக தெரிகிறது. மேலும் புதிதாக தான் கட்டியுள்ள வீடு தொடர்பாக சுஹைல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

புதுவையில் இருந்து கோவைக்கு
அதில், தனது வீட்டில் என்னென்ன வசதிகள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன என்பது போன்ற விஷயங்களையெல்லாம் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோக்களை புதுவையை சேர்ந்த ஏசி மெக்கானிக்கான அனுராம் என்ற இளைஞரும் பார்த்துள்ளார். வீடியோவை பார்த்ததோடு இருக்காமல் சுஹைல் வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணம் அனுராமிற்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி புதுவையில் இருந்து அவர் கோவைக்கு சென்ற அனுராம் சுஹைலின் புது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றுள்ளார்.

கத்தியுடன் புகுந்து மிரட்டல்
இரவு நைசாக வீட்டிற்குள் புகுந்த அனுராம் பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். காலை 6 மணிக்கு எழுந்து வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். வீட்டுக்கதவை யாரோ ஒருவர் பயங்கரமாக தட்டும் சத்தம் கேட்டதால் சுஹைல் திறந்து பார்த்துள்ளார். அப்போது கத்தியுடன் புகுந்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார் அனுராம். உடனே சுதாரித்துக்கொண்ட சுஹைல் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்தார்.

போலீசார் விசாரணை
இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் புதுவையை சேர்ந்த அனுராம் என்பது, சுஹைல் யூடியூப் மூலமாக அதிக பணம் சம்பாதித்து உள்ளதால் அதை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்ததாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அனுராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே தனது வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது தொடர்பான வீடியோவையும் யூடியூப்பில் வெளியிட்டு இருக்கிறார் சுஹைல்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications