தி.மு.க.தான் பா.ஜ.க.வின் உண்மையான பி டீம்.. இது உனக்கு தெரியுமா ராஜா.. கோவையை தெறிக்க விட்ட சீமான்

Subscribe to Oneindia Tamil

கோவை: எங்களை பாஜக பி டீம் என்று திமுக கூறுகிறது. ஆனால் திமுகதான் பாஜகவின் உண்மையான பி டீம் என்று சீமான் பேசினார்.

பாஜகவுடன் அதிமுக நல்ல உறவு கொண்டுள்ளது. திமுக கள்ள உறவு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இலவசங்களை அறிவித்து மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றி விட்டனர். நான் ஆட்சிக்கு வந்தவுடன் மஞ்சள் நோட்டீஸ் விட்டு அரசு திவாலாகிவிட்டது என்று அறிவித்துவிடுவேன் என்றும் சீமான் தெரிவித்தார்.

சீமான் பிரசாரம்

சீமான் பிரசாரம்

தமிழகம் முழுவதும் மக்களின் வாக்குகளை பெற்று விட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் போட்டி போட்டு எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை சிவானந்தா காலனியில் நாம் தமிழர் கட்சி சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்கள் இடையே சீமான் பேசியபோது கூறியதாவது:-

அரசு திவால் என அறிவிப்பேன்

அரசு திவால் என அறிவிப்பேன்

இலவசங்களை அறிவித்து மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றி விட்டனர். நான் ஆட்சிக்கு வந்தவுடன் மஞ்சள் நோட்டீஸ் விட்டு அரசு திவாலாகிவிட்டது என்று அறிவித்துவிடுவேன். முன்னர் ஆட்சி செய்தவர்களின் கடனை என் ஆட்சியில் மக்கள் மீது சுமத்த மாட்டேன். எனது ஆட்சியில் நான் வாங்கும் கடனுக்கு மட்டுமே வட்டி கட்டுவேன்.

திராவிட கட்சிகளுக்கு பேச தகுதி இல்லை

திராவிட கட்சிகளுக்கு பேச தகுதி இல்லை

இனிவரும் காலங்களிலும் நாம்தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். தமிழர்கள்தான் இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திராவிட கட்சிகளுக்கு சமூகநீதி பேச தகுதி இல்லை.. தி.மு.க ஆதிக்குடிகளுக்கு பொதுதொகுதியில் எத்தனை தொகுதிகள் கொடுத்துள்ளர்கள். அண்ணன் திருமாவளவனுக்கு கொடுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் இரு தொகுதிகள் மட்டுமே ஆதிபழங்குடியினருக்கு கொடுத்தார்.

திமுகதான் பாஜக பி டீம்

திமுகதான் பாஜக பி டீம்

மேலும் பெரியாரை தலைவராக ஏற்றுகொண்ட திமுக பெண்களுக்கு கொடுத்த இடங்கள் 12. பிரபாகரன் பிள்ளைகள் கொடுத்தது 117. திமுக பெண்ணியம் பேசக்கூடாது. பாஜகவின் உண்மையான பி டீம் திமுக தான். திருடன் கூட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க திருடன், திருடன் என கத்துவது போல எங்களை பாஜக பி டீம் என திமுக சொல்கிறது. திமுக போன்ற நாடகக்காரர்களை உலகத்தில் பார்க்க முடியாது. பாஜகவுடன் அதிமுக நல்ல உறவு கொண்டுள்ளது. திமுக கள்ள உறவு கொண்டுள்ளது என்று சீமான் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+