நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ளார். இந்நிலையில், கோவையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ளார். இந்நிலையில், கோவையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

திமுக கூட்டணி
தொடர்ந்து செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன் 2.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினோம். தேர்தலில் எப்படி எதிர்கொள்வது குறித்து பேசியுள்ளோம். தேர்தல் பணிகளை சிறப்பாக எடுத்து செல்வது பற்றி ஆலோசித்துள்ளோம். கோவையில் உள்ள 10 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது குறித்து திட்டங்களை வகுத்துள்ளோம்.
திமுகவின் வெற்றி நிச்சயம்
கோவையில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலுமே 1,000க்கும் மேற்பட்டோர் எழுச்சியான வரவேற்பை கொடுக்கிறார்கள். அதற்கு நான் காரணமல்ல. முதலமைச்சர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் கோவை தெற்கில் எனக்கு உற்சாகமான வரவேற்பளிக்க காரணம். கடந்த 5 வருடங்களில் கோவை தெற்கு தொகுதிக்கு முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளார்.
செம்மொழி பூங்கா
மாநகராட்சிக்குள் எண்ணற்ற பணிகள் நடந்துள்ளன. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளனர். எந்தெந்த பகுதிகளில் என்ன தேவை இருக்கிறது என்பதை நன்கறிவேன். முதலமைச்சர் வழங்கியுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். கோவையின் அடையாளமான செம்மொழி பூங்கா கோவை தெற்கு தொகுதியில் தான் அமைந்துள்ளது. சனி, ஞாயிறுகளில் அங்கு சராசரியாக 20,000 மக்கள் வருகை புரிகிறார்கள்.
கோவை திட்டங்கள்
முதலமைச்சர் கோவைக்கு நிறைய திட்டங்கள் கொடுத்துள்ளனர். மக்கள் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். பெற்றி பெற்றவுடன் அந்தப் பணிகளை ஓராண்டில் நிறைவேற்றுவோம். முதலமைச்சர் மேட்டுப்பாளையமும், துணை முதலமைச்சர் கோவைக்கு வர வாய்ப்புள்ளது. தோழமை கட்சி தலைவர்களும் கோவையில் பிரச்சாரம் செய்வார்கள்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications