வாக்காளர் பட்டியலில் 100 பேரில் 12 பேர் நீக்கம்.. இது SIR-க்கு கிடைத்த வெற்றி.. அண்ணாமலை!
கோவை: தமிழக வாக்காளர் பட்டியலில் 100 பேரில் 12 பேர் நீக்கப்பட்டிருப்பது SIRக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். SIR மூலமாக இதுவரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறிய அண்ணாமலை, குறைபாடு உடைய வாக்காளர் பட்டியலுடன் தான் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4 முதல் SIR பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி வரை SIR விண்ணப்பிங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் வாக்கு உரிமையை இழக்கும் சூழல் நேரலாம் என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பின்னரும் புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னையில் மட்டும் SIR மூலமாக 26 சதவிகித வாக்குகள் நீக்கப்பட உள்ளது.
அப்படியென்றால் 4 வாக்குகளில் ஒரு வாக்கு இல்லை.. SIR பணிகள் மூலமாக வாக்கு சதவிகிதம் உயரும். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான பூத்கள் உள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடி முதல் 5.5 கோடி வாக்காளர்கள் தான் இருப்பார்கள். இது பாஜகவுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நன்மைதான். இதனால் போலி வாக்குகள் போடுவோருக்கு இது பிரச்சனை.
நாங்கள் 80 லட்சம் வாக்குகள் வரை நீக்க வேண்டும் என்று கோரினோம். தற்போது வரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து 12.5 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் தான். இதனால் இந்த வாக்காளர் பட்டியலை வைத்துதான் நாம் லோக்சபா தேர்தலையும் சந்தித்துள்ளோம்.
SIRஐ தீவிரமாக செய்வதால், 100 வாக்காளர்கள் இருக்கக் கூடிய இடத்தில் 12 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது SIRன் முதற்கட்ட வெற்றி. இதன்பின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க 2ஆம் கட்ட SIR பணிகள் நடக்கும். அதில் இன்னும் சில வாக்காளர்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications