தன்மான பிரச்சனை.. கோவையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலுமணி மாஸ்டர் பிளான்.. கவுன்டவுன் ஸ்டார்ட்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். இது நம் தன்மான பிரச்சனை. கவுன்டவுன் ஸ்டாரட் ஆகிவிட்டது என்று கோவை தெற்கு தொகுதி வெற்றிக்கான அதிமுக திட்டங்களை வேலுமணி விபரித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலுமணி, "கோவை தெற்கு தொகுதியில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் அம்மன் அர்ஜூனனை வெற்றி பெற செய்ய வேண்டும். கோவை தெற்கு விஐபி தொகுதியாக மாறிவிட்டது.

வெற்றி உறுதியாகிவிட்டது
அம்மன் அர்ஜூனன் எப்போதும் போல இருக்கிறார். நமக்கு அற்புதமான கூட்டணி அமைந்திருக்கிறது. எங்களுக்கு இங்கு யார் வந்தாரும் கவலையில்லை. கோவை தெற்கில் அம்மன் அர்ஜூனனின் வெற்றி உறுதி செய்யபட்டது. இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட்சிட்டியில் கோவை உள்ளிட்ட 11 ஸ்மார்ட் சிட்டி தமிழகத்திற்கு அதிமுக ஆட்சியில் பெறப்பட்டவை. கோவை தெற்கு தொகுதியிலும் ஏராளமான பணிகளை செய்துள்ளோம்.
கோவையில் திமுக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. நமது திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்துள்ளனர். எந்தப் பணியும் செய்யாமல் 5 வருடங்களை முடித்துவிட்டனர். சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இங்கு கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் 21 தொகுதிக்கு நான் பொறுப்பாளர். இந்த தொகுதிகளில் நாம் வெல்வோம்.
தன்மான பிரச்சனை
எதற்கெடுத்தாலும் பாஜகவை குறை சொல்கிறார்கள். பாஜகவை உள்ளே விட மாட்டோம் என்கிறார்கள். டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே போட்டி என்கின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களை கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மத்திய அரசிடம் பேசி அதிகமான திட்டங்களை கேட்டு பெறுவோம். கோவைக்கு ஏதாவது செய்தோம் என்பதை செந்தில் பாலாஜியால் சொல்ல முடியுமா.
இன்னும் 20 நாட்கள் சுழன்று பாடுபட வேண்டும். கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு கேட்பதை செய்து கொடுக்க வேண்டும். தேர்தலில் குடும்பமாக செயல்பட வேண்டும். இது நம்முடைய மானப்பிரச்சனை. 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அம்மன் அர்ஜூனன் வெற்றி பெறுவார். கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
விஜய் வீட்டை விட்டு வரவில்லை
பெண்கள் வீடு வீடாக போய் உட்கார்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 400 வாக்குகள் பெற வேண்டும். குழுவாக பிரிந்து வக்குகளை சேகரிக்க வேண்டும். நோட்டீஸ் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும். மக்களின் வேதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் கடந்த 10 நாட்களாக வெளியே வரவில்லை. இப்போது வந்திருக்கிறார். மக்கள் இதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள்.
விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு போய்விடுகிறார். திமுகவை விமர்சனம் செய்தால் ஓட்டு பிரிந்து போகும். திமுக வெற்றி பெறும். இதுதான் அவர்களின் திட்டம். நம்முடைய ஒரு ஓட்டு கூட மற்ற கட்சிக்கு போகக்கூடாது. அரசியல் வேறு, சினிமா வேறு. இதை விஜய் உணர வேண்டும். அவரைப் பார்க்க வந்து 41பேர் உயிரிழந்தவர்களை பார்க்க அவர் கரூர் செல்லவில்லை. உயிருக்கு போராடியவர்களை பார்க்க மருத்துவமனையும் செல்லவில்லை.
எம்ஜிஆர் ஆகிட முடியாது
சொந்தக் கட்சியினரையே காப்பாற்ற முடியாதவர் எப்படி மக்களை எப்படி காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார். எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. அவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற போவதில்லை. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து திமுகவின் வெற்றிக்கு உதவி செய்வார்கள். எனவே அவர்களுக்கு ஓட்டு செல்லாமல் தடுக்க வேண்டும்" என்றார்.
-
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications