திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் மீண்டும் அவர் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என்ஆர் கார்த்திகேயன் போட்டியிடும் நிலையில் அவருக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் 9 பேர் வென்றனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வென்றார்.

இந்த முறையும் கோவை மாவட்டத்தை தக்க வைக்க அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், திமுக கூட்டணி கோவை மாவட்டத்தில் அதிக இடங்களை கைப்பற்ற துடித்து வருகிறது.
எஸ்பி வேலுமணியின் கோட்டை
இதில், கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கோட்டையாகும். இவர் கடந்த 3 முறை தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக அவர் தற்போது களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என்ஆர் கார்த்திகேயன் போட்டியிட்டுள்ளார்.
திமுக வேட்பாளரின் பெயரில் 4 பேர்
இந்நிலையில் தான் திமுக வேட்பாளர் என்ஆர் கார்த்திகேயன் பெயரில் 4 பேரின் போட்டியிடுகின்றனர் அதன்படி எம் கார்த்திகேயன், ஆர் கார்த்திகேயன், கார்த்திகேயன் ஆர் தொண்டாமுத்தூர், கார்த்திகேயன் ஆர் பூலுவாபட்டி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். வாக்காளர்களை குழப்பும் வகையில் இவர்கள் களமிறங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னணியில் எஸ்பி வேலுமணி?
மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் எஸ்பி வேலுமணியின் நோட்டரியாக மகேந்திரன் என்பவர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி எம்கார்த்திகேயன், ஆர் கார்த்தியேன், கார்த்திகேயன் ஆர் தொண்டாமுத்தூர், கார்த்திகேயன் ஆர் பூலுவாபட்டி ஆகியோருக்கும் அவர் நோட்டரி மகேந்திரனாக இருக்கிறார். இதனால் பின்னணியில் எஸ்பி வேலுமணி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications