கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன்.. 'அதிகம் பேசமாட்டேன்..ஒன்லி ஆக்‌ஷன் தான்..' முதல்வர் பன்ச்

Google Oneindia Tamil News

கோவை: வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் அதிகம் பேசமாட்டேன் செயல் தான் என்னுடைய பணி எனப் பேசினார். மேலும், லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன் என பன்ச் வசனமும் பேசினார்.

Recommended Video

    Chennai-ஐ போல கோவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாகக் கோவை சென்றுள்ளார். கோவை, திருப்பூர் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்

    சூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லைசூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை

    இன்று காலை சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு சாலை மார்க்கமாகக் கோவை வந்தடைந்தார்.

     படங்கள் இல்லை

    படங்கள் இல்லை

    வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ரூ.89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 திட்டங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார். மேலும், ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதவிர ரூ.440 கோடியில் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். அரசு நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியின் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெறவில்லை.

     ஏன் தாமதம்

    ஏன் தாமதம்

    இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடக்கும் நிகழ்வுக்கு வர சுமார் 2 மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. இருப்பினும், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன்.

     வாக்கு அளிக்காதவர்களுக்கும்

    வாக்கு அளிக்காதவர்களுக்கும்

    தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாநிலத்தில் பெருவாரியான இடங்களில் வென்ற போதிலும், கோவையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கொளத்தூரில் தொகுதியில் வெற்றி அறிவிப்பு வெளியான பிறகு கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்ற போது அளித்த பேட்டியை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். அன்று சொன்னது போல் திமுக ஆட்சி இருக்கும் வரை எங்களுக்கு வாக்கு அளித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்தே உழைப்போம்.

     செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    அதற்காகத் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை மாவட்டத்திற்கு நியமித்துள்ளேன். தேர்தலுக்கு முன்பு மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று பெட்டியில் பூட்டிய போது அதைச் எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். ஆனால், ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிலிருந்த லட்சக்கணக்கான மனுக்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். தாமதம் ஆகும் மனுக்கள் குறித்து அந்தந்த மனுதாரர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் அளித்து வருகிறோம். அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

     அதிமுக ஆட்சி

    அதிமுக ஆட்சி

    கோவை விமான நிலை விரிவாக்க பணிக்கு மட்டும் 1032 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் 2 நாள்களுக்கு ஒருமுறை சீராகக் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் எந்தவொரு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. கோவையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை இல்லாத இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்படும்.

     அதிகம் பேச மாட்டேன்

    அதிகம் பேச மாட்டேன்

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவது கோவை மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சி அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வைப்பதே எங்கள் ஆட்சியின் நோக்கம். நான் அதிகம் பேசமாட்டேன், செயல் தான் என்னுடைய பணி. நிச்சயமாகக் கோவை மாவட்டம், தமிழ்நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக மாற்ற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu CM stalin latest speech in coimbatore. DMK govt in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X