கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20 நாட்களாக.. போக்கு காட்டும் 'பாகுபலி'..கிராமங்களில் அட்டகாசம்.. பிடிக்க முடியாமல் தினறும் வனத்துறை

Google Oneindia Tamil News

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று கடந்த 20 நாட்களாக சுற்றி திரிகிறது. பாகுபலி என்று அழைக்கப்படும் இந்த யானை மலையடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

குளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுகுளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மேலும் மக்களை விரட்டி தாக்க முற்படுவது என்று தொடர்ந்து அலப்பறை செய்து வருகிறது. அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் பாகுபலியை கட்டுப்படுத்த வேண்டும் வனத்துறைக்கு தொடர் கோரிக்கைகள் வந்தன.

போக்கு காட்டும் பாகுபலி

போக்கு காட்டும் பாகுபலி

கடந்த 27-ம் தேதி இந்த யானையை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர். பாகுபலியை பிடிப்பதற்காக கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் வனத்துறை தன்னை பிடிக்க முயற்சிப்பதை அறிந்து கொண்ட பாகுபலி யானை அவர்களின் கையில் சிக்காமல் போக்கு காட்டியது.

ஆபரேஷன் ஒத்திவைப்பு

ஆபரேஷன் ஒத்திவைப்பு

கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறை ஒரு இடத்திற்கு சென்றால் வேறு இடத்திற்கு செல்வது என்று வனத்துறைக்கு விளையாட்டு காட்டியது பாகுபலி. பாகுபலி அருகில் கூட நெருங்க முடியாததால் வேறு வழியின்றி பாகுபலியை பிடிக்கும் ஆபரேஷனை ஒத்தி வைத்தது வனத்துறை. தற்போது மீண்டும் பாகுபலி யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

தொடர் அட்டகாசம்

தொடர் அட்டகாசம்

தற்போது அந்த யானையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதாவது தினமும் பாகுபலியை கண்காணித்து பட்டாசு வெடித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் வேலையை வனத்துறையினர் செய்து வருகின்றனர். ஆனாலும் முன்பை விட அதிகமாக இப்போது பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசப்படுத்தி வருகிறது

Recommended Video

    தோல்வியே சந்தித்தது இல்லை.. காட்டு யானைகளை நடுங்க செய்யும் கும்கி யானை Kaleem
    மக்களின் கோரிக்கை

    மக்களின் கோரிக்கை

    பாகுபலியை பிடிக்க முயற்சிக்கும் வனத்துறையினரின் திட்டமெல்லாம் தோல்வி அடைந்து வருகிறது. அந்த பகுதி மக்களுக்கே மட்டும் அல்லாது வனத்துறைக்கே பெரும் சவாலாக விளங்கி வருகிறது. எனவே கூடுதல் தனிப்படைகள், மருத்துவ குழுவினர், கும்கி யானைகள் கொண்டு பாகுபலியை பிடித்தே தீர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    English summary
    The forest department has not been able to catch a single wild elephant that has been roaming in the Mettupalayam forest in Coimbatore district for 20 days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X