'T23' ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் நீடிப்பது ஏன்?.. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் விளக்கம்!
கோவை: நீலகிரி மாவட்டம் கூடலுார் அடுத்த மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 4 பேர் புலி தாக்கி இறந்தனர். டி23 எனப்படும் குறிப்பிட்ட ஒரு புலிதான் மனிதர்களை கொல்வதாக கூறப்பட்டது. அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் வனத்துறையினர் எவ்வளவோ முயற்சித்தும் ஆட்கொல்லி புலி அவர்களின் கையில் சிக்காமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்று வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்
கோவையில் உள்ள தமிழ்நாடு வனஉயிர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறியதாவது:-

மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை
அ.தி.மு.க ஆட்சியில் வன விலங்குகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. ரூ.6 கோடி வரையிலான தொகையை மக்களுக்கு கொடுக்காமல் அ.தி.மு.க இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்ககோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசானை வெளியிட்டுள்ளார். வன விலங்குகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படமால் இருக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று கூறினார்.

T23 ஆட்கொல்லி புலி
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், T23 ஆட்கொல்லி புலியை பிடிக்க கேரளாவிலிருந்தும் வனத்துறையினர் வந்துள்ளனர். புலியைக் பிடிக்கும்போது மழை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதால் சற்று சிரமமாக உள்ளது. புலி ஆரம்பத்தில் சுற்றி திரிந்த இடமான தேவன் எஸ்டேட் பகுதியிலும் 30 வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர். அறிவியல் பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் உயர்ரக கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் புலியை தேடி வருகிறோம்,.

கண்காணிப்பு கேமரா
புலி வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்பதையும் தொடர்ந்து கண்கானிப்பு கேமரா மூலமாக கண்காணித்து வருகிறோம். கூடிய விரைவில் புலியை பிடித்துவிடுவோம். சிங்கார காட்டு பகுதியில் வேறு புலிகளும் இருப்பதால் அதையும் கவனத்தில் கொண்டு தான் இந்த புலியை பிடிக்க திட்டமிட்டுள்ளோம்.

நடவடிக்கை
மண் சார்ந்த மரங்களை மாவட்டம்தோறும் வளர்க்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
அயல்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தைல உள்ளிட்ட மரங்களைக் அகற்ற இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். வனத்தையொட்டிய அரசு தரிசு நிலங்களில், அந்த பகுதியையொட்டி வசிக்கின்ற மக்களின் கால்நடைகளை மேய்பதற்காக புற்கள் நடப்பட்டு கால்நடைகள் வனப்பகுதிக்குள் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்' என்று வனத்துறை அமைச்சர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications