செம சான்ஸ்.. ஆனைமலைக்கு ஓர் சுற்றுலா.. மூலிகை 'டீ'.. பழங்குடியினர் உணவு.. கட்டணம் இவ்வளவுதான்!
கோயம்புத்தூர்: கோவையின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் 'ஜம்போ டிரெயில்ஸ்' எனும் விழிப்புணர்வு சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் யானைகள், இதர வன விலங்குகள், தாவரங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் வழித்தடத்தின் வாயிலாக இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதால் இதற்கு 'ஜம்போ டிரெயில்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுற்றுலா பயணிகளுக்கு நல்ல பலனளிக்கும் என்று காப்பகத்தினர் கூறியுள்ளனர்.

விழிப்புணர்வு சுற்றுலா
இந்த சுற்றுலா நவம்பர் 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி பயணம் முதலில் சேத்துமடையில் இருந்து துவங்குகிறது. பயணிகள் டாப்சிலிப் உள்ளிட்ட பகுதிகளுக்கு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இவர்களுடன் வனத்துறையின் உயிரியலாளர் மற்றும் அப்பகுதியை நன்கு அறிந்த உள்ளூர்வாசி ஒருவரும் இடம் பெற்றிருப்பர். இவர்கள் ஆனைமலை புலிகள் காப்பகம் குறித்து பகுதி பகுதியாக பயணிகளுக்கு விளக்குவார்கள்.

வாட்சிங் டவர்
டாப்சிலிப்பை அடுத்து ஒட்டுமொத்த பொள்ளாச்சியின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் அம்புளி கண்காணிப்பு கோபுரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த பயணம் யானையின் வழித்தடங்களை அடிப்படையாக கொண்ட பாதையில் செல்வதால் அவ்வழியில் உள்ள தாவரங்கள், விலங்குகள் பற்றி உடன் வரும் வழி காட்டி இது குறித்து விளக்குவார். அதேபோல இதில் உள்ள நுணுக்கமான விஷயங்களை வன உயிரியலாளர் விளக்கி கூறுவார். இந்த பயணம் அடுத்த கட்டமாக 'வாட்சிங் டவர்' எனப்படும் காவல் கோபுரத்தை சென்றடையும் அங்கு பழங்குடியின மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை தேநீரை வழங்குவார்கள்.

டாப்சிலிப்
இதனையடுத்து டாப்சிலிப்பில் உள்ள விளக்க மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு பல்லுயிர் மற்றும் காடுகள் பெருக்கம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் கொடுக்கப்படும். இதனையடுத்து பயணிகளுக்கு பழங்குடியினர் தயாரித்த மதிய உணவு வழங்கப்படும். இது பயணிகளுக்கு நிச்சயம் ஓர் அற்புதமான தருணமாக இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதியாக அங்கிருந்து தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள ஆனைமலையின் பரந்து விரிந்த தேக்கு தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

ஆங்கிலேய வனத்துறை அதிகாரி
இங்கு, ஆங்கிலேய வனத்துறை அதிகாரி 'ஹ்யூகோ வுட்டின்' கல்லறை அமைந்திருக்கிறது. இதுவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம். இந்த இடத்தில் இயற்கையிலேயே தேக்கு மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருந்தன. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பின்னர் இங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு கப்பல் செய்ய எடுத்து செல்லப்பட்டன. இதனால் இந்த பகுதி முற்றிலும் அழிவுக்குள்ளானது. இதனையடுத்து இங்கு வனத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்தான் 'ஹ்யூகோ வுட்'. இவர் நான்கு பாக்கெட்டுகள் கொண்ட சட்டையை அணிந்து கொண்டு தினமும் தேக்கு மரங்கள் வெட்டப்பட்ட பாதையில் நடந்து செல்வார்.

தேக்கு காடுகள்
சட்டை பையில் தேக்கு விதைகள் இருக்கும். போகும் போதும் வரும் போதும் விதைகளை நட்டு வைத்து விட்டு வருவார். மட்டுமல்லாது இவர் பொறுப்பேற்ற பின்னர் இந்த பகுதியில் தேக்கு மரங்கள் வெட்ட ஆங்கிலேயர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 1915லிருந்து 1919ம் ஆண்டு வரை இங்கு வன அதிகாரியாக இவர் பணியாற்றியுள்ளார். இவர் இல்லையெனில் இங்கு தற்போது இவ்வளவு பெரிய தேக்கு மர காடுகள் இருந்திருக்காது என்று பழங்குடியின மக்கள் கூறுகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் பயணிகள் காடுகள் குறித்த அவசியத்தை உணர்வு பூர்வமாக அறிந்து கொள்வார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முயற்சி
இறுதியாக கோழிகமுக்தி யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். இத்துடன் இந்த பயணம் முடிவடைந்துவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பயண திட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இயக்குநர் எஸ்.ராமசுப்ரமணியன் மற்றும் துணை இயக்குநர் (பொள்ளாச்சி கோட்டம்) பார்கவ தேஜா ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு துவங்கும் இப்பயணம் இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்துவிடும். இவையனைத்திற்கும் கட்டணமாக ரூ.999 வசூலிக்கப்படும். மேலும் கூடுதல் தகவலுக்கு 88832-26662, 89037-08240, 94438-57838 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications