ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்.. அமமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகும்.. டிடிவி தினகரன் கொடுத்த டிவிஸ்ட்!
கோவை: ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பதை முடிவு செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவில் யார் மீதும் வருத்தம் இல்லை என்றும் கூறிய டிடிவி தினகரன், 2026 தேர்தலில் 4 முனைப் போட்டியே நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எந்தக் கட்சியுடன் யார் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்த அமமுக, இம்முறை யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், விஜய்யை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார். இதனால் தவெக உடன் கூட்டணிக்கு செல்வாரா என்ற விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை முடிவு செய்து அறிவிப்போம்.
எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வேறு யார் மீதும் அதிமுகவில் எங்களுக்கு வருத்தம் இல்லை.. எங்களுக்கு துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி.. துரோகத்திற்கு எதிராக தொடங்கப்பட்டதுதான் அமமுக.. அதற்கு எதிராக போராடி வருகிறோம். அண்ணன் செங்கோட்டையனும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரே தவெகவில் இணைந்தார்.
அமமுக உடன் சில கட்சிகள் பேசி வருகிறார்கள். துரோகத்தை வீழ்த்த எது சரியான கூட்டணியோ, அதில் அமமுக இடம்பெறும். அமமுக 2 முறை தனித்து நின்றது. அப்போது மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.. அதனால் இம்முறை கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளோம். அதேபோல் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலை காரணம் அல்ல.
2021 சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுடன் பேசியது உண்மை தான். என்னுடன் இருந்த நிர்வாகிகள் 40 பேருக்கு சீட் கொடுக்குமாறும், நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கூறினேன். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே அமமுக போட்டியிட்டது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிடிவி தினகரன் ஜனவரி மாதத்தில் அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தார். தற்போது பிப்ரவரி மாதத்திற்கு கூட்டணி அறிவிப்பை ஒத்தி வைத்திருக்கிறார். இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி இறுதி வடிவம் பெற்ற பின், டிடிவி தினகரம் முடிவை அறிவிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம்











Click it and Unblock the Notifications