வாய் திறக்காத வானதி சீனிவாசன்.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? எவ்ளோ எதிர்பார்த்தோம்.. தடதட கேள்விகள்
கோவை: கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று சுட்டிக் காட்ட ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்.
இது கோவை தெற்கு தொகுதி தொடர்பான கோரிக்கையாக இருந்தால் கூட பரவாயில்லை. தமிழ்நாடு முழுக்க.. இல்லை, இல்லை, உலகம் முழுக்க உள்ள அஜித் ரசிகர்கள் மத்தியிலுள்ள கோரிக்கை என்பதால்தான் தொடர்ந்து இந்த பிரச்சினை லைம் லைட்டுக்கு வருகிறது.
ஆம்.. வலிமை அப்டேட் வாக்குறுதி பற்றிதான் சொல்கிறோம்.

வானதி சீனிவாசன் போட்டி
2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் இங்கு களம் இறங்கினர். எனவே வானதி சீனிவாசனுக்கு போட்டி மிக கடுமையாக இருந்தது.

வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட்
எனவே அனைத்து தரப்பினர் ஆதரவையும் பெற தன்னால் என்ன வாக்குறுதிகளை தர முடியுமோ அத்தனையையும் வழங்கினார் வானதி. ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருபவர் வானதி சீனிவாசன். அவரிடம் நெட்டிசன் அதாவது அஜித் ரசிகர் ஒருவர்,, 'வலிமை அப்டேட் எப்ப?' என கேட்டார். அதற்கு, "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என பதிலளித்திருந்தார் வானதி. அப்போது இந்த ட்வீட் வைரலாக பரவியது.

வானதியிடம் ஏன் கேட்டனர்
வலிமை அப்டேட் பற்றி வானதி சீனிவாசனிடம் ஏன் கேட்கப்பட வேண்டும் என்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. தற்போது அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் தொடர்பாக எந்த ஒரு அப்டேட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. நீண்ட நாட்களாக படம் குறித்த எந்த ஒரு புகைப்படமும் அல்லது தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் டென்ஷனாகி விட்டனர்.

அப்டேட் இருக்கா.. அப்டேட்
இதனால் யாரை சந்தித்தாலும் வலிமை அப்டேட் இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். ஒரு காலகட்டத்திலும் ரோஜா பாக்கு போட்டீங்களா.. ரோஜா பாக்கு போட்டீங்களா என்று கேட்கும் பழைய விளம்பரம்போல வலிமை அப்டேட் எப்போது.. வலிமை அப்டேட் எப்போது என கேட்க ஆரம்பித்து விட்டனர் அஜித் ரசிகர்கள்.

அத்துமீறிய அப்டேட் தலைவலி
கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் கிரிக்கெட் வீரரிம் வலிமை அப்டேட் கேட்கும் அளவுக்கு கூட அவர்கள் போய்விட்டனர். ஒருகட்டத்தில் இப்படியெல்லாம் செய்ய கூடாது என்று அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. இப்படித்தான் வானதி சீனிவாசனிடமும் ஒரு ரசிகர் அப்டேட் கேட்டு அதற்கு அவரும் பதில் சொன்னார். இதில் கொடுமை என்னவென்றால் வானதி சீனிவாசன் வாங்கித் தருவதாக கூறி இத்தனை மாதங்களாகியும் அப்டேட் மட்டும் வெளியாகவில்லை. தயாரிப்பு தரப்பும் கிணற்றில் போட்ட கல் மாதிரி தான் கிடைக்கிறது.

யாராவது வலிமை அப்டேட் கொடுங்களேன்
இந்த நிலையில்தான் நேற்று மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பாக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார் வானதி சீனிவாசன். அப்போதும் நெட்டிசன்கள் அவரிடம் வலிமை அப்டேட் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த கேள்விகளுக்கு வானதி சீனிவாசன் பதில் அளிக்கவில்லை, என்பது குறிப்பிடதக்கது. எப்போதுதான் வானதி சீனிவாசனின் வாக்குறுதி நிறைவேறுமோ, அது அஜித்துக்கே வெளிச்சம். அல்ல, அல்ல.. போனி கபூருக்கே வெளிச்சம்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications