கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயிச்சதே 4 தொகுதிதான்.. எதிர்க்கட்சித் தலைவரை பாஜக தேர்வு செய்யுமாம்.. வானதி சொல்வதைப் பாருங்க!

Google Oneindia Tamil News

கோவை: தமிழக எதிர்க்கட்சித் தலைவரை பாஜக தேர்வு செய்யும் என தேசிய பாஜக மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் திடீரென பூத்த 4 தாமரைகள்..எப்படி சாத்தியமானது ? | Oneindia Tamil

    நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதையடுத்து சட்டசபைத் தேர்தலையும் இதே கூட்டணி அமைத்து சந்திக்கலாம் என இரு கட்சிகளும் முடிவு செய்திருந்தன.

    சூறையாடப்பட்ட அம்மா உணவகத்திற்கு திரண்ட அதிமுகவினர்.. போராட்டம்.. பதற்றம்.. மீண்டும் வந்த பெயர் பலகைசூறையாடப்பட்ட அம்மா உணவகத்திற்கு திரண்ட அதிமுகவினர்.. போராட்டம்.. பதற்றம்.. மீண்டும் வந்த பெயர் பலகை

    மாநில கட்சியுடன் தேசிய கட்சி கூட்டணி வைத்ததால் முதல்வர் வேட்பாளர் யார் என பாஜகவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது தேசிய பாஜக தலைமை அதை முடிவு செய்யும் என கூறி அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

    முக்கியத் தலைவர்கள்

    முக்கியத் தலைவர்கள்

    இதையடுத்து அதிமுகவில் இரு முக்கியத் தலைவர்கள் இருப்பதால் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா, இல்லை ஓ பன்னீர் செல்வமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து எந்த சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக செயற்குழு கூட்டம் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர்.

    கடைசி நேரம்

    கடைசி நேரம்

    இதன் மூலம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்ற பாஜகவுக்கு தெளிவுப்படுத்திவிட்டனர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதிலும் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் கடைசி நேரத்தில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

    மாவட்ட அலுவலகம்

    மாவட்ட அலுவலகம்

    இதையடுத்து அவர் கோவை காந்திரபுரத்தில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அளித்த பேட்டியில் : கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் எனக்காக வாக்களித்த தேர்தல் பணியாற்றிய பாஜக அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிகள்.

    ஒத்துழைப்பு

    ஒத்துழைப்பு

    அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். ஆக்கப்பூர்வமான வகையில் எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியை பெற முடியுமோ, அந்த வகையில் மாநில வளர்ச்சிக்கு பங்காற்றுவோம். தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் உதவியுடன் செய்வோம்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். நான் எம்எல்ஏ மட்டும்தான் என கூறினார் வானதி. பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதே முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தேர்வு செய்யும் என கூறி வந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக தலைமையே தேர்வு செய்யும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Vanathi Srinivasan says that leader of opposition of Tamilnadu Assembly will be announced by BJP HQ.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X