கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அவரை" நியமிச்சிட்டாங்க.. இல்லத்தரசிகள் மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கணும்.. வேலூர் இப்ராஹிம் அட்டாக்

செந்தில்பாலாஜியை விமர்சித்து பேட்டி தந்துள்ளார் வேலூர் இப்ராஹிம்

Google Oneindia Tamil News

கோவை: உள்ளாட்சி தேர்தலில் பணம் மது ஆறாக கரைபுரண்டோடும்.. பலரும் அதில் மூழ்குவர். அதனால், இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், அதேபோல தமிழக மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்கவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

அந்த வகையில், கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தொற்று

 நியமனம்

நியமனம்

கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர்கள் ராமசந்திரன், சக்கரபாணி ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர்... ஆனாலும், இங்கு செந்தில் பாலாஜியை நியமித்ததற்கான காரணம் என்ன என்பது பல்வேறு சலசலப்புகளும், யூகங்களும் கட்சிக்குள் நடந்து எழுந்து வருகின்றன... எனினும், கோவை மாவட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் திமுகவை தூக்கி நிறுத்த முடியாத நிலை உள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

கடந்த தேர்தலில் திமுகவால் இங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, எஸ்பி வேலுமணியின் வளர்ச்சி செல்வாக்கை ஓரளவு தடுத்து நிறுத்தவும், செந்தில்பாலாஜியை இங்கு முதல்வர் நியமித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நியமனத்தை பாஜக தரப்பு விமர்சித்து வருகிறது.. அந்த வகையில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிமும் கருத்து கூறியுள்ளார்..

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

கோவையில் அவர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.. கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றும் திட்டத்தால் ஊழல் நடக்க நிச்சயம் வாய்ப்புள்ளது. முன்னோர்கள் இறைவனுக்கு தானமாக தந்த பாரம்பரிய ஆபரணங்களை ஒருபோதும் உருக்கி அழித்து தங்க கட்டிகளாக மாற்றக்கூடாது... இப்படி செய்வது பக்தர்களின் நம்பிக்கையை வெகுவாக சீர்குலைத்துவிடும்.. கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்..

 உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலில் பணம் மது ஆறாக கரைபுரண்டோடும்.. பலரும் அதில் மூழ்குவர். அதனால், இல்லத்தரசிகள் தங்களது மாங்கல்ய பலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்றார். இதையடுத்து, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்ற இப்ராஹிம், ஒரு புகார் மனு அளித்திருந்தார்.. அதில், ஃபேஸ்புக்கில் 2 பேர் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.. அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்வதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர்.

English summary
Vellore Ibrahim says about DMK Gov and Minister Senthil Balaji in Kovai meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X