ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்கன்னு கரூரில் சொன்னாருல்ல? அதை follow பண்ணிதான் அன்பில் கைது! நிர்மல் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

கோவை: ரூல்ஸை பாலோ பண்ணுங்கன்னு சொன்னாரே அன்பில் மகேஷ், இப்போது அவரை கைது செய்ததன் மூலம் ரூல்ஸை பாலோ பண்ணியாச்சு என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் அதுவும் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது திமுகவுக்கு மிகப் பெரிய அவமானம்.

Nirmal kumar

அவர்கள் கைவைக்காத இடமே இல்லை. ஆனால் தற்போது பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பிற்காக வழங்கப்படும் சான்றிதழில் கூட பார்ட்டி ஃபண்ட் வாங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும்பாலானோருக்கு கட்சி நிதி என்றால் என்னவென சந்தேகம் கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் ஒரு சான்றிதழுக்காக , அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளது.

தவெக ஆட்சி அமைந்ததும் பள்ளி நிர்வாகத்தினர் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர். அந்தளவுக்கு இவர்கள் எந்த பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. ஒரு ஆண்டில் ரூ 400 கோடி முறைகேடு என்றால் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்?

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கோப்புகளை திறங்க திறங்க என முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தியிருந்தனர். ஒரே ஒரு கோப்பைதான் விஜய் தற்போது திறந்தார். ஒரு கோப்புக்கே இவ்வளவு பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள். வெட்கமே இல்லாமல் ஸ்டாலின் இதை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்.

கரூர் சம்பவத்தில் விஜய்யின் கதையை முடித்திருக்க வேண்டும் என திமுகவினர் சிறைச்சாலை வாசலில் பேசுகிறார்கள் என்றால் கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கும் அன்பிலுக்கும் தொடர்பிருக்கிறது என்றுதானே அர்த்தம்? இதற்காகத்தான் அன்பில் மகேஷ் அன்று நாடகம் போட்டாரா?

அன்று ரூல்ஸை பாலோ பண்ணுங்கன்னு சொன்னா கேட்டானுங்களானு கேட்டாரே அன்பில் மகேஷ்! இப்போது ஊழல் வழக்கில் ரூல்ஸை பாலோ செய்து கைது செய்யாதாகிவிட்டது. இனி அன்பில் மகேஷ் ஜாமீன் கேட்க கூடாது, இந்த வழக்கில் இருந்து எப்படியாவது வெளியேற நினைக்கக் கூடாது. சட்டப்படி வழக்கை சந்திக்கட்டும்.

2ஜி விவகாரத்தில் எத்தனை பேர் மறைந்தார்கள், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என எல்லாம் தெரியும். எனவே அவர்களை காவலில் எடுத்தால்தான் பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார் அளிப்பார்கள். யாரையும் பழிவாங்கும் நடவடிக்கை இதுவல்ல. செய்த தவறுக்கான விளைவுதான் இது என்று நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு 2025-ல் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். பலியானோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்ற அன்பில் மகேஷ், அங்கிருந்த சடலங்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது "ரூல்ஸை பாலோ பண்ணுங்கன்னு சொல்லியும் கேட்கலையே" என அழுதார். அதாவது பிரச்சாரத்திற்கு வந்த நேரம், பிரச்சாரத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை குறித்தெல்லாம் ரூல்ஸை பாலோ செய்திருந்தால் இத்தனை உயிர்கள் பறி போயிருக்காதே என்ற தொனியில் அவர் தெரிவித்திருந்தார். இன்று அதே வாக்கியத்தை வைத்து நிர்மல் குமார் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+