"காக்கா பிரியாணி".. அந்த மூட்டையை பிரித்தால் உள்ளே ஐயோ.. ஏற்கனவே புலிக்கறி, பூனைக்கறி.. கலங்கும் கோவை
பொள்ளாச்சி பகுதிகளில் நிறைய காகங்கள் கொன்று வேட்டையாடப்படுவதால் பகீர் தகவல் கிளம்பி வருகிறது
கோவை: சத்தியமங்கலத்தில் 4 வெளிமாநிலத்தவர் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. என்ன நடந்தது?
சில நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை கிளப்பியது.. அங்கு ஆக்கப்பள்ளி என்ற கிராமம் உள்ளது.. காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில், அடிக்கடி யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற விலங்குகள் நுழைந்துவிடும்..
விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களையும் நாசமாக்கிவிடுவதால், கிராம மக்கள், வனவிலங்குகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற, சட்டத்துக்கு புறம்பாக மின்வேலிகளை அமைத்துள்ளனர்.

புலிசாதம்
இந்த மின்வேலிகளில் சிக்கி இதுவரை எத்தனையோ வனவிலங்குகள் இறந்துள்ளதாக சொல்கிறார்கள்.. சாதாரண வேலியை போட்டால், விலங்குகள் அவைகளை உடைத்து கொண்டு உள்ளே புகுந்துவிடுவதாக சொல்லி, கரண்ட் வேலிகளை அமைத்திருக்கிறார்கள். இதனால், சில நாட்களுக்கு முன்பு, ஒரு புலி இந்த கரண்ட் வேலியில் சிக்கி இறந்துவிட்டது. இதை பார்த்த கிராமத்தினர், அந்த புலிக்கறியை வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிந்ததுமே, அதிர்ச்சியடைந்து, விசாரிப்பதற்காக கிராமத்துக்குள் வந்தபோது, கிராம மக்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டாலும், போலீசார் புலியை சமைத்த 12 பேரை கைது செய்தனர்.

புலிக்கறி + பூனைக்கறி
இந்த புலிக்கறி சம்பவத்தின் பரபரப்பு முடிவதற்குள்ளேயே, சென்னையில் பூனைக்கறி சம்பவம் பகீரை கிளப்பியது.. மட்டன்கறியுடன் சேர்த்து பூனைக்கறியை ஓட்டலில் மிக்ஸ் செய்து விற்பதாக கடந்த வாரம் செய்திகள் பீதியை கிளப்பின.. பூனைகளை கொன்று, அதன் தோலை உரித்து, ஆட்டுக்கறியுடன் கலந்து விற்றுவிடுவார்களாம்... பிராட்வே, அயனாவரம், சவுகார்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு, சாலையோர வியாபாரிகளுக்கு பூனை இறைச்சியை விற்றுள்ளனர்.. நரிக்குறவர்களிடமிருந்து வாங்கும் எலும்பில்லா பூனைக்கறியை, மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி போன்றவைகளை தயாரித்துள்ளனர்..

கோலா உருண்டை
நடைபாதை கடைகளுக்கு பூனைகளை விற்ற 2 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.. இரவு நேரங்களில் அப்பார்ட்மென்ட்களின் அருகில் சுற்றித்திரியும் பூனைகள் பிடிக்கப்பட்டு பார்ப்பதற்கு அழகாக உள்ள பூனைகள் வசதி படைத்தவர்களிடம் விற்கப்படுகிறதாம்.. இது தொடர்பான செய்திகள் பரவியதுமே உடனடி நடவடிக்கையும் அப்போதே எடுக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த பகீர் கிளம்பி உள்ளது.. காக்கா பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்படுகிறதா? என்ற கலக்கம் கொங்கு பகுதியில் சூழ்ந்துள்ளது.. பொள்ளாச்சி அடுத்த பெரியக் கவுண்டானூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றனவாம்..

காகங்கள் பலி
எதற்காக இந்த காகங்கள் திடீர் திடீரென செத்து கிடக்கின்றன என்பது புரியாமல், அந்த பகுதி விவசாயிகள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், நாகராஜ் என்ற விவசாயி அந்த காட்சியை பார்த்திருக்கிறார்.. தன்னுடைய தோட்டத்தின் அருகே, சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் சில மூட்டைகளை தூக்கி கொண்டு நடந்து போனாராம்.. அந்த சாக்குகளில் முழுக்க முழுக்க காகங்கள் நிரம்பி கிடந்ததாம். காகங்களை தனித்தனியாக பிரித்து வைத்து, எதுக்காக மூட்டைகளில் போட்டு எடுத்து செல்ல வேண்டும் என்று அதிர்ச்சி அடைந்த நாகராஜ், அவரிடம் விசாரிக்க முற்பட்டுள்ளார்.

காக்கை கறி
உடனே சுதாரித்துக் கொண்ட, அந்த நபர், உடனடியாக தப்பி ஓடியுள்ளார்.. இதனால், நாகராஜ், அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து, பின்னாடியே துரத்தி சென்று, சந்திராபுரம் பகுதியில் அந்த நபரை மடக்கிப் பிடித்திருக்கிறார். பிறகு, பெரியாக் கவுண்டனூர் அழைத்து வந்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடமும் பொதுமக்கள் அவரை ஒப்படைத்துள்ளனர்.. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அந்த நபர் பெரியாக்கவுண்டர் பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.. மூக்கு பொடியுடன் ஏதோ ஒரு விஷ மருந்தையும் கலந்து, ஆங்காங்கே தூவி இருக்கிறார். இதை சாப்பிட்டதுமே காகங்கள் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கின்றன. தோட்டங்களிலும் சாலைகளிலும் இப்படி 50 க்கு மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்திருக்கின்றன...

காக்கா பிரியாணி
அந்த காகங்களை எல்லாம் சாக்கு பைகளில் சேகரித்து தப்பியோட முயன்றிருக்கிறார்.. இந்த விஷமருந்தினால் காக்கைகளும் மட்டுமல்லாமல், அதை சாப்பிட்டால், எல்லா கால்நடைகளுக்குமே பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறதாம்.. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.. ஆனால், காகங்களை எதற்காக கொல்ல வேண்டும்? இத்தனை காகங்களையும் கொன்று எங்கே எடுத்து செல்கிறாய்? என்று போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு அந்த நபர் சொன்னதாவது, "என்னுடைய பெயர் சூர்யா.. 37 வயதாகிறது.. செஞ்சி வாடிபகுதியை சேர்ந்தவன்.. ஆனால், நீண்ட காலம் குஜராத்திலேயே தங்கி சர்க்கஸில் வேலை பார்த்து வருகிறேன்.. வெண்ணிற படை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பதற்காகத்தான் இத்தனை காகங்களையும் கொன்றேன்" என்று கூறியிருக்கிறார்..

காக்கா கறி
ஆனாலும், பிரியாணிக்காகவே காகங்களை கொன்று எடுத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. அதுமட்டுமல்ல, மருந்து தயாரிப்பதற்காக அந்த காகங்களை வேட்டையாடவில்லை என்றும், ஏதோ ஹோட்டலில் கொடுத்து பணம் சம்பாதிப்பதற்காகவுமே இப்படி மூட்டையாக காங்களை பார்சல் கட்டி இந்த வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்றும் ஒரு சலசலப்பு கிளம்பி உள்ளது.. எனவே, சாலையோர உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு, இறைச்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது. ஏற்கனவே புலிக்கறி, பூனைக்கறி என்று பயந்து கிடக்கும்போது, இந்த காக்கா கறி சமாச்சாரம் திடீரென கிளம்பி பகீரை கிளப்பி கொண்டிருக்கிறது.

காக்கா பலி
இதனிடையே, கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் சிஞ்சுவாடியில் வசித்து வருகிறாராம்.. ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று சர்க்கஸ் நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வருபவராம்.. இவரது மகனுக்கு வெள்ளை படை நோய் இருப்பதால், அதற்கு மருந்து தயாரிப்பதற்காக விஷம் கலந்த உணவை வீசி காகங்களை கொன்றதாக சொல்கிறார். எனினும், வேறு ஏதேனும் காரணங்களுக்காக காகங்களுக்கு விஷம் வைத்து கொன்றாரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேஞ்சர் காகங்கள்
கைதான சூர்யாவிடமிருந்து 20 க்கும் மேற்பட்ட இறந்த காகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் சொல்லும்போது, "இந்த பகுதியில் அடிக்கடி நூற்றுக்கணக்கான காகங்கள் மர்மமாக இறந்து விட்டன.. மயில்களும், கோழிகளும் கூட இறந்துவிட்டன.. விஷம் வைத்து, அந்த நபர்தான் காகங்களை இத்தனை நாட்களும் கொன்று வந்துள்ளார்.. எங்கள் விவசாய தோட்டங்களில் நிறைய கால்நடைகள் உள்ளன. ஒருவேளை விஷம் கலந்த உணவை கால்நடைகள் உண்டால் உயிரிழக்க கூடும். அதனால், பிடிபட்ட நபரை தீர விசாரித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications