ரியல் அதிமுககாரர்.. ஊராட்சி துணைத்தலைவர் டூ கவுன்சிலர் டூ எம்எல்ஏ.. யார் இந்த அமுல் கந்தசாமி?
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள், அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சூழலில் அடுத்த சில மணி நேரங்களிலேயே அமுல் கந்தசாமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மோசமான உடல்நிலை காரணமாக உயிரிழந்தார். புற்றுநோய் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுல் கந்தசாமி, திடீரென உயிரிழந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று காலை கோவை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அமுல் கந்தசாமி காலமாகி இருக்கிறார். 2021ஆம் ஆண்டு வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. இவர் கோவை மாவட்டம் அன்னனூரைச் சேர்ந்தவர்.
சொந்த தொகுதியில் போட்டியிடாமல் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டாலும், சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் ஆறுமுகத்தை வீழ்த்தி வெற்றிபெற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக முதல் வெற்றியை பெற்ற எம்எல்ஏ அமுல் கந்தசாமி தான். இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல் சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்த அவர், ஒருமுறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட கவுன்சிலராகவும் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், சுபநிதி என்ற மகளும் இருக்கின்றனர்.
இவரது மகள் கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் நாளை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவின் 4ஆம் தலைமுறையாகும் மிதுன்? ஓபிஎஸ் மேல தண்ணி பாட்டிலை வீசி.. அப்பவே ப்ளான் போட்ட எடப்பாடி? -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?












Click it and Unblock the Notifications