"108" ஓட்டுநருடன் சௌந்தர்யாவுக்கு கள்ளக்காதல்.. கணவனை சிறுவர்களை வைத்து கொலை முயற்சி.. 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, இளம்பெண் தனது கள்ளகாதலன் மற்றும் நான்கு சிறுவர்களுடன் இணைந்து கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி பகுதியைச் சேர்ந்த சேதுராஜராமன் சிங்(29). சிங்காநல்லூரில் இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் சௌந்தர்யா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சேதுராஜாராம் தற்போது தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மருத்துவமனை

மருத்துவமனை

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் நின்று கொண்டிருந்த சேதுராஜாராம் சிங்கை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளது. கழுத்து மற்றும் முகத்தில் படுகாயமடைந்த கணவனை மீட்ட சௌந்தர்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

சிங்காநல்லூர் போலீஸ்

சிங்காநல்லூர் போலீஸ்

இதுகுறித்து தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் சௌந்தர்யாவிற்கு, அதே மருத்துவமனையில் அவசர ஊர்தி ஓட்டுநராக பணியாற்றி வரும் குணசேகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தனிமையில் சந்திப்பு

தனிமையில் சந்திப்பு

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி சௌந்தர்யா வெளியில் சென்று வந்துள்ளார். இவர்களின் கள்ளக்காதல் சேதுராமன் சிங்கிற்கு தெரிய வரவே இதுதொடர்பாக தனது மனைவியை கண்டித்துள்ளார்.

புகார்

புகார்

இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தனது கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளகாதலுனுடன் இணைந்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கணவர் வெளியில் நின்று கொண்டிருப்பதாக கள்ளகாதலனுக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த குணசேகரன் உள்பட 5 பேர் கொண்ட கும்பலுடன் இணைந்து சௌந்தர்யா சேதுராஜராம் சிங்கை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

மயக்கமடைந்த கணவன்

மயக்கமடைந்த கணவன்

இதனையடுத்து மயக்கமடைந்த கணவனை, ஒன்றும் தெரியாதது போல்,சௌந்தர்யா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சேதுராஜராம் சிங் சிகிச்சைக்குப் பிறகு மயக்கம் தெளிந்து சம்பவம் குறித்து கூற சௌந்தர்யாவின் நாடகம் அம்பலமானது. இதனையடுத்து சௌந்தர்யா, குணசேகரன், சௌந்தர்யாவின் சகோரதன் மற்றும் மூன்று சிறுவர்களை கைது செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+