வன்முறைகளை தூண்டிவிட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்த ராஜபக்சே கும்பல் சதி- சந்திரிகா குமாரதுங்க
கொழும்பு: இலங்கையில் வன்முறைகளை தொடர்ச்சியாக தூண்டிவிட்டு அதனையே காரணம் காட்டி ராணுவ ஆட்சியை அமல்படுத்த மகிந்த ராஜபக்சே குடும்பம் சதி செய்வதாக இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் நடத்திய அரசுக்கு எதிரான போராட்டம் புதிய பிரளயத்தையே ஏற்படுத்தி வருகிறது. இலங்கை ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரியே பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் கோத்தபாயவும் மகிந்த ராஜபக்சேவும் அதிகாரத்தையும் பதவியையும் தக்க வைத்துக் கொள்வதிலேயே வெறியாக இருந்தனர்.

இதன் ஒருபகுதியாகவே பதவி விலகும் முன்பாக வன்முறை கும்பலை களமிறக்கியது ராஜபக்சே அண்ட் கோ. ஆனால் சிங்களரோ, ராஜபக்சேக்கள் ஏவிவிட்ட வன்முறை கும்பலை ஓடஓட விரட்டி அடித்தனர். அத்துடன் ராஜபக்சேவுக்கு ஆதரவாக நிற்கும் அத்தனை அரசியல்வாதிகள் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் இனி இலங்கையில் உயிர் வாழவே முடியாது; சிங்களரே தம்மை தாக்க தொடங்கிவிட்டனர் என கருதும் ராஜபக்சே குடும்பம் நாட்டைவிட்டு தப்பி ஓடவும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வன்முறைகளை காரணமாக வைத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது. வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
Recommended Video

தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் தமது சமூக வலைதளப் பக்கங்களில் நீதி, ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். வன்முறைகளை தூண்டி இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications