கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொழி, மத பெருமை வேண்டாம்! மீறினால் இலங்கை நிலை தான் இந்தியாவுக்கு வரும்: ஜெய்ராம் ரமேஷ் சுளீர்

Google Oneindia Tamil News

கொழும்பு: ‛‛இலங்கையில் தற்போதைய நிலைக்கு பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி மொழி, மதம் மற்றும் கலாச்சார பெரும்பான்மை வாதம் பேசியது தான் காரணமாக உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கான பாடம் நிறைய உள்ளது'' என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஒரு மாதத்துக்கு மேலாகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இது இலங்கையின் அரசியலில் எதிரொலித்தது. இலங்கை அரசின் தவறான பொருளாதார நெருக்கடி தான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

பாகுபலி பட வில்லன் பல்வால்தேவன் சிலை போல ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள் பாகுபலி பட வில்லன் பல்வால்தேவன் சிலை போல ராஜபக்சே சிலையை உடைத்த இலங்கை மக்கள்

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாத அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. குறிப்பாக தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடந்த மாதம் 9ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடாரம் அமைத்து இரவு பகல் பாராமல் போராட்டம் தொடர்ந்தது.

போர்களமாகிய இலங்கை

போர்களமாகிய இலங்கை

இதனால் நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரமடைந்து வந்தது. இதனால் வேறு வழியின்றி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதையடுத்து பல இடங்களில் வன்முறைகள் வெடிக்க துவங்கின. ராஜபக்சேக்களின் ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த வன்முறையின்போது ராஜபக்சேக்களின் வீடுகள் மீது கல்வீசப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் இலங்கை போர்களமாக மாறியுள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் கருத்து

ஜெய்ராம் ரமேஷ் கருத்து

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இலங்கை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை விஷயத்தில் இந்தியாவுக்கும் பாடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இலங்கையின் தற்போதைய நிலைக்கு பொருளாதார நெருக்கடி மட்டுமே காரணமல்ல. இதன் பின்னணியில் மொழி, மதம் மற்றும் கலாச்சார பெரும்பான்மைவாதம் உள்ளது. இலங்கையின் நீண்டகால மாணவர் என்ற முறையில் இதனை என்னால் கூற முடியும். இதன்மூலம் இந்தியாவில் வசிக்கும் நமக்கும் நிறைய பாடம் உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Srilanka-வில் Rajapaksa குடும்பத்துக்கு வந்த ஆபத்து.. தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்ட நிலை !
    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    அதாவது இந்தியாவில் சமீபகாலமாக மொழி, மதம் சார்ந்த பிரச்சனைகள் தலை தூக்கி உள்ளன. டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. இதனால் தான் ஜெய்ராம் ரமேஷ் மொழி, மதம் பெருமை பற்றி பேச வேண்டாம் என மறைமுகமாக கூறியுள்ளார்.

    English summary
    ‛‛I can say that the roots of the beautiful country's crisis lies not just in short term economics, but more in its lingustic, religious and cultural majoritarianism over the past decades. there are lessons for us in india as well’’ says Congress Jairam Ramesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X