Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் பொருளாதார நெருக்கடி! வீதிக்கு வந்த மக்கள்.. இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் கோத்தபய.!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளன நிலையில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களை தவிர்க்க இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    Sri Lanka declares state of emergency after unrest | OneIndia Tamil

    இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொரோனாவால் நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

    மக்கள் போராட்டம்

    மக்கள் போராட்டம்

    நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளதால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே வியாழன் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக அவர் பதவி விலகக் கோரி போராடிய நிலையில் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

    மீண்டும் முற்றுகை

    மீண்டும் முற்றுகை

    போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 45 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 5 போலீசார் காயமடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய, நுகேகொட, கல்கிசை மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனாலும் அங்கு நிலைமை கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஜனாபதிபதி வீட்டை முற்றுகையிட மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவசரநிலை பிரகடனம்

    அவசரநிலை பிரகடனம்

    இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சஷவின் இல்லத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன

    இலங்கையில் பொது அவசரநிலை

    இலங்கையில் பொது அவசரநிலை

    முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான மக்கள் அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்ற நிலையில் தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசரகால நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். "இலங்கையில் பொது அவசரநிலை" இருப்பதாக தான் நம்புவதாக கூறியுள்ள கோத்தபய ராஜபக்ச கடுமையான சட்டங்களை செயல்படுத்துவது அவசியம், இது சந்தேக நபர்களை கைது செய்து காவலில் வைக்க பாதுகாப்பு பரந்த அதிகாரத்தை அளிக்கிறது" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+